லாஸ்ட் டைம் ஷார்ட்... இப்ப வளந்துருச்சு... முன்னாடி பின்னாடி போஸ் காட்டிய மாளவிகா மோகனன்!
சென்னை : லாக்டவுனுக்குப் பிறகு தனுஷ் 43 படப்பிடிப்பு தொடங்கியுள்ளது நடிகை மாளவிகா மோகனன் கலந்து கொண்டுள்ளார்.
மாஸ்டர் வெற்றிக்குப் பிறகு மாளவிகா மோகனுக்கு எக்கச்சக்கமான வாய்ப்புகள் குவிந்து வர பாலிவுட்டிலும் கைவசம் சில படங்களில் நடிக்கிறார்.
எதையும் வித்தியாசமாக செய்து அசத்தி வரும் இவர் எப்பொழுது லாஸ்ட் டைம் ஷார்ட் இப்ப வளர்ந்துடுச்சு என முன்னாடி பின்னாடி போஸ் கொடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

D43 த்ரில்லர்
தனுஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் ஓடிடி தளத்தில் வெளியான ஜகமே தந்திரம் கலவையான விமர்சனங்களை கண்டு வருகிறது. இந்த நிலையில் கார்த்திக் நரேனுடன் இணைந்து D43 படத்தில் தனுஷ் நடித்து வருகிறார் . மாளவிகா மோகனன் ஜோடியாக நடிக்கிறார். ஆக்ஷன் த்ரில்லர் படங்களுக்கு பெயர் போன இயக்குனர் கார்த்திக் நரேன் இந்த படத்தையும் த்ரில்லர் கதை களத்தில் இயக்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது
சில மாதங்களுக்கு முன்பு முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் லாக்டவுனுக்கு பிறகு இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறு விறு வேகத்தில் நேற்று ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. மாளவிகா மோகனன் மற்றும் பலர் கலந்து கொள்ள இந்த மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

விரைவில் ஹிந்தியிலும்
தமிழில் இப்போதைக்கு D43ல் மட்டுமே நடித்து வரும் மாளவிகா இந்தியில் கைநிறைய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். ஷாகித் கபூர் விஜய் சேதுபதி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் வெப் சீரிஸ் ,யுத்ரா மேலும் சில படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார். தமிழ், மலையாளத்தை போல ஹிந்தியிலும் மிக விரைவிலேயே முன்னணி நடிகையாக ஜொலிக்க ஆயத்தமாகி வருகிறார்.

கதாநாயகியாக மாளவிகா
இந்தியன் பாகம் 2 இயக்கி வந்த ஷங்கர் தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படப்பிடிப்பை கிடப்பில் போட்டுவிட்டு தெலுங்கிற்கு தாவி விட்டார். ராம் சரண் 15வது படத்தை இயக்க அனைத்து கட்டப் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வர இதில் கதாநாயகியாக மாளவிகா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

முன்னாடி பின்னாடி போஸ்
இவ்வாறு ஒரு புறம் படங்களில் மிக பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களை மகிழ்விக்க வித்தியாச வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி போட்டோக்களை இறக்கி வருகிறார். அந்த வகையில் இப்பொழுது ஒயிட் டிரஸ் உடன் முன்னாடி பின்னாடி போஸ் கொடுத்துக்கொண்டு லாஸ்ட் டைம் கூந்தல் ஷார்ட்டா இருந்துச்சு இப்போ வளந்துருச்சு. அப்ப எனக்கு ஒரு 8 வயசு இருக்கும். யாருக்கெல்லாம் நீளமான கூந்தல் பிடிக்கும் . என மளமளவென வளர்ந்த கூந்தலைக் காட்டி போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











