நார்த் இந்தியாவுல கூட நான் மாஸ்டர் ஹீரோயின் தான்.. விஜய்யோட ரீச் அப்படி.. மாளவிகா மோகனன் நச் பதில்!
சென்னை: கேரள நடிகையான மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட, மாஸ்டர் மற்றும் மாறன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
பாலிவுட்டிலும் சில படங்களில் நடித்து வரும் மாளவிகா மோகனனை அங்குள்ள ரசிகர்கள் அவரை மாஸ்டர் ஹீரோயின் என்றே அடையாளம் காண்பதாக சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
மேலும், நடிகர் விஜய்க்கு ஹீரோயின் ஆகி விட்டால் போதும், ரசிகர்களின் கொண்டாட்டமும் கவனிப்பும் வேற லெவலில் இருப்பதாக பேசி உள்ளார்.

மாளவிகா மோகனன்
மலையாள ஒளிப்பதிவாளர் கே.யூ. மோகனனின் மகளான மாளவிகா மோகனன் கடந்த 2013ம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். நானு மாட்டு வரலக்ஷ்மி படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார். பிரபல இயக்குநர் மஜித் மஜிதி இயக்கத்தில் இந்தியில் வெளியான பியோண்ட் தி கிளவுட்ஸ் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான இவர், 2019ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார்.

மாஸ்டர் ஹீரோயின்
ரஜினிகாந்தின் பேட்ட, விஜய்யின் மாஸ்டர் மற்றும் தனுஷின் மாறன் என தொடர்ந்து தமிழில் 3 படங்களில் நடித்திருந்தாலும், மாளவிகா மோகனனை இன்னமும் ரசிகர்கள் மாஸ்டர் ஹீரோயின் என்றே அழைத்து வருகின்றனர். நடிகர் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்த நிலையில், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஏகப்பட்ட விஜய் ரசிகர்கள் ஃபாலோ செய்தது குறிப்பிடத்தக்கது.

நார்த் இந்தியாவுல விஜய்யோட ரீச்
யுத்ரா எனும் இந்தி படத்தில் நடித்து வரும் மாளவிகா மோகனன் சமீபத்தில் அளித்த பேட்டியில், நார்த் இந்தியாவுல ஒரு குக் கிராமத்திற்கு நானும் எங்க அம்மாவும் சென்றிருந்தோம். அங்கே உள்ள சில ரசிகர்கள் என்னை பார்த்து நீங்க மாஸ்டர் ஹீரோயின் தானேன்னு கேட்டாங்க, இந்தியில் நான் ஏற்கனவே பியோண்ட் தி கிளவுட்ஸ் படத்தில் நடித்தாலும், மாஸ்டர் ஹீரோயின் என்றே என்னை ரசிகர்கள் அடையாளம் கண்ட நிலையில், தான் விஜய் சாரின் ரீச் எந்தளவுக்கு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டேன்.

விஜய் ரசிகர்கள் வேறலெவல்
விஜய்க்கு ஜோடியாக யார் நடித்தாலும், அவர்களை அவரது ரசிகர்கள் ட்ரீட் செய்யும் விதமே வேறலெவல் தான். மாஸ்டர் படம் வெளியாவதற்கு முன்பாகவும், வெளியான பின்னரும் விஜய் ரசிகர்கள் கொடுத்த ரெஸ்பெக்ட், அவர்கள் கொண்டாடிய விதமெல்லாம் எப்போதுமே மறக்க முடியாது. லோகேஷ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் விஜய் கூட நடிக்க எனக்கு கிடைச்ச வாய்ப்பு ரொம்ப பெரிய வாய்ப்பு என அந்த பேட்டியில் ஓப்பனாக பேசி உள்ளார் மாளவிகா மோகனன்.

இந்தி படம்
சமீபத்தில் வெளியான மாளவிகா மோகனனின் இந்தி ஆல்பமான Tauba பல மில்லியன் பார்வைகளை கடந்து டிரெண்டாகி வருகிறது. இயக்குநர் ரவி உத்யவார் இயக்கத்தில் சித்தார்த் சதுர்வேதி நடிப்பில் உருவாகி வரும் யுத்ரா படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் மாளவிகா மோகனன். மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்றும், சூர்யாவுடன் ஜோடி சேர வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











