விஜய்யுடன் மீண்டும் நடிக்க ஆசையாக உள்ளது.. பிரபல நடிகை விருப்பம்!
சென்னை : இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாக தனுஷ் 43ல் நடித்து வருகிறார் மாளவிகா மோகனன்.
பெரும் எதிர்பார்ப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தையும் ரசிகர்களையும் பெற்றுத் தந்துள்ளது.
மலையாளம், ஹிந்தி, தமிழ் என ரவுண்டு கட்டி நடித்து வரும் மாளவிகா மோகனன் விஜய்யுடன் மீண்டும் இணைந்து நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

புதுவிதமான அனுபவத்தை
பல தடங்கல்களை தாண்டி மாஸ்டர் சென்ற ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி வசூல் சாதனை படைத்தது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தது படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்தது. இதுவரை விஜய் நடித்த கதாபாத்திரங்களில் இது மிகவும் வித்தியாசமாக இருந்ததால் ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை இந்த படம் கொடுத்திருந்தது.

மாஸ்டர்
ஏற்கனவே பேட்ட படத்தில் மாளவிகா மோகனன் நடித்திருந்தாலும் மாஸ்டர் ஹீரோயினாக நடிக்கும் முதல் படமாகும். மேலும் சாந்தனு பாக்யராஜ், கௌரி கிஷன், ஆன்ட்ரியா, விஜய் டிவி தீனா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர். விஜய்யின் உறவினரும் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ இந்த படத்தை தயாரித்திருந்தார்.

குறைவான அளவிலேயே
தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் ஹிந்தி என மாஸ்டர் திரைப்படம் பல மொழிகளில் வெளியாகி அனைத்து இடங்களிலும் ஹிட்டடித்தது. இதில் விஜய் மற்றும் மாளவிகா வரும் காட்சிகள் அனைவரையும் ரசிக்க வைக்கும்படி இருந்தாலும் மிகக் குறைவான அளவிலேயே காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது.
Recommended Video

நடிக்க ஆசையாக
இந்த நிலையில் மாளவிகா மோகனன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மாஸ்டர் திரைப்படம் என் திரை வாழ்க்கையிலேயே மிகப்பெரிய மைல் கல்லாக உள்ளது. விஜய் போன்ற பெரிய நட்சத்திரங்களுடன் நடிப்பது மிகப்பெரிய ஆர்வத்தை என்னிடம் தூண்டியது. லோகேஷ் கனகராஜ், விஜய்சேதுபதி என பலரும் மாஸ்டர் படப்பிடிப்பில் இணைந்து ஒன்றாக நேரத்தை செலவழித்தது மிகவும் அருமையான தருணங்கள். மாஸ்டர் கூட்டணியில் மீண்டும் நடிக்க ஆசையாக உள்ளது என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











