Malavika Mohanan: தண்ணிக்குள்ள திடீரென இறங்கிய தங்கலான் நாயகி.. மாளவிகா மோகனன் அழகே தனி தான்!
சென்னை: நடிகை மாளவிகா மோகனன் வாட்டர் அண்ட் ஒயிட் எனும் தீமில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் சற்றுமுன் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தையும் லைக்குகளையும் அள்ளி வருகிறார்.
பிரபல மலையாள ஒளிப்பதிவாளர் மோகனனின் மகளான மாளவிகா துல்கர் சல்மானின் பட்டம் போலே படத்தின் மூலம் மலையாள திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.

கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்த அவர் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
மாஸ்டர் தந்த மவுசு: பேட்ட படத்தில் அறிமுகம் ஆனாலும், மாஸ்டர் படம் தான் தமிழ் சினிமாவில் மாளவிகா மோகனனுக்கு ஹீரோயின் அந்தஸ்த்தை கொடுத்தது. அதன் பின்னர் தனுஷ் உடன் இணைந்த நடித்த மாறன் படம் ஓடிடியில் வெளியான நிலையில், அப்படியொரு படம் வந்ததே பல ரசிகர்களுக்கு தெரியாத நிலையில், இன்னமும் மாஸ்டர் ஹீரோயினாகவே மாளவிகா மோகனன் கொண்டாடப்பட்டு வருகிறார்.

தங்கலான் தங்கம்: விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்த மாளவிகா மோகனன் அடுத்து பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரமுக்கு ஜோடியாக தங்கலான் படத்தில் நடித்துள்ளார். அடுத்த ஆண்டு அந்த படம் வெளியாக உள்ள நிலையில், அதன் ரிலீசுக்காக காத்திருக்கிறார். பாலிவுடிட்லும் யுத்ரா எனும் படத்தில் நடித்துள்ளார்.

தண்ணீருக்குள் இறங்கிய தேவதை: தங்கலான் ஷூட்டிங் முடிந்த நிலையில், மீண்டும் இன்ஸ்டாகிராமில் உள்ள 3.9 மில்லியன் ரசிகர்களை ஹேப்பியாக்க லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். தண்ணீரில் வெள்ளை நிற உடையை அணிந்து கொண்டு தேவதை போல ஜொலிக்கும் காட்சிகளை காணவே ரசிகர்களுக்கு கண் கோடி வேண்டும் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

சொட்டச் சொட்ட நனைந்து: இடுப்பளவுக்கு தண்ணீரில் இறங்கி சொட்டச் சொட்ட நனைந்த ஆடையுடன் இடையழகையும் கட்டழகையும் கண்களுக்கு விருந்தாக காட்டி ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளார் நடிகை மாளவிகா மோகனன். வாட்டர் மற்றும் ஒயிட் டிரெஸ் இருந்தால் போதும் டிவைன் பியூட்டியாக மாறி விடலாம் என தங்கலான் ஹீரோயின் கேப்ஷன் கொடுத்துள்ளார்.

தவறான முடிவு வேண்டாம்: தங்கலான் அப்டேட் கிடைக்காமல் நாங்க கஷ்டப்படுறது தாங்க முடியலன்னு தண்ணிக்குள்ள இறங்கி எந்த தவறான முடிவையும் எடுக்க வேண்டாம் தலைவி சீக்கிரமே அறிவிப்பு வரும் என ரசிகர்கள் வேறமாதிரி கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











