நடிகை மாளவிகா இப்போ எப்படி இருக்காங்கனு தெரியுமா..? வைரலாகும் போட்டோ

By Vignesh Selvaraj

Recommended Video

நடிகை மாளவிகா குடும்பம் -வைரலாகும் புகைப்படம்-

சென்னை : தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மாளவிகா.

திரையுலகில் வாய்ப்புகள் குறைய தொடங்கியதும் 2007-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். தற்போது அவருக்கு 38 வயதாகிறது.

தற்போது இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். மாளவிகா குடும்பத்துடன் சேர்ந்து இருக்கும் கியூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மாளவிகா

மாளவிகா

நடிகை மாளவிகா தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதில், கார்த்திக், அஜித், முரளி ஆகிய முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். அதே நேரத்திலேயே தெலுங்கு, கன்னட படங்களிலும் நடிக்கத் தொடங்கியிருந்தார்.

வாள மீனு

வாள மீனு

மிஷ்கின் இயக்கிய 'சித்திரம் பேசுதடி' படத்தில் 'வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்' பாட்டுக்கு அவர் போட்ட ஆட்டம் அசரடித்தது. மறுபடியும் மாளவிகாவின் சினிமா கேரியரில் படங்கள் வரிசையாக வரத் தொடங்கின.

திருமணம்

திருமணம்

தொடர்ந்து வந்த 'திருட்டுப் பயலே' படத்தில் அவரது நெகட்டிவ் ரோல் மாளவிகாவுக்கு பெரும் பெயரை வாங்கிக் கொடுத்தது. இதையடுத்து மறுபடியும் பிஸி ஆனார் மாளவிகா. தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த அவர் திடீரென சுமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும்

திருமணத்திற்கு பிறகும்

திருமணம் ஆனாலும் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறினார். சொன்னதோடு நில்லாமல், திருமணத்திற்குப் பிறகு நடித்த ஒரு படத்தில் கிளாமர் காட்சிகளிலும் நடித்துக் கொடுத்தார். மேலும், சில படங்களில் கெஸ்ட் ரோலில் தலையைக் காட்டியவர் அதன் பிறகு ஆளையே காணோம்.

குடும்பத்துடன் மாளவிகா

குடும்பத்துடன் மாளவிகா

மாளவிகா நடிப்பதை முழுவதுமாக நிறுத்தி பல வருடங்கள் ஆகின்றன. இவருக்கு தற்போது ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். சமீபத்தில் இவர்கள் குடும்பத்தோடு எடுத்துக்கொண்ட செம க்யூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X