மாளவிகா சர்மாவுக்கு இவ்ளோ பெரிய மனசா.. வெயிலில் வாடும் குழந்தைகளுக்கு செருப்பு மாட்டி விடுறாரே!

சென்னை: நடிகை மாளவிகா சர்மா வெயிலில் வாடும் குழந்தைகளுக்கு செருப்பு மாட்டி விடும் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான காபி வித் காதல் படம் முலம் தமிழில் அறிமுகமான இவர் தெலுங்கில் நெலா டிக்கெட், ரெட் படங்களின் மூலம் ஹீரோயினாக சினிமாவில் நுழைந்தார்.

Malavika Sharma gives slippers and school bags to kids

சமீபத்தில் வெளியான சல்மான் கான், பூஜா ஹெக்டே நடித்த கிஸி கா பாய் கிஸி கா ஜான் படத்திலும் இவர் நடித்துள்ளார்.

வழக்கறிஞர் டு சினிமா ஹீரோயின்: டாக்டர் படித்து விட்டு பலர் நடிகைகளாக வலம் வரும் நிலையில், வக்கீல் படிப்பை முடித்து விட்டு சினிமாவுக்கு ஹீரோயினாக வந்தவர் மாளவிகா சர்மா. பெற்றோரின் ஆசையை நிறைவேற்றிய இந்த அழகுப் புயல் தனக்கு பிடித்த சினிமாத் துறையை தற்போது தேர்வு செய்து நடித்து கலக்கி வருகிறார்.

Malavika Sharma gives slippers and school bags to kids

தெலுங்கில் அறிமுகமான மாளவிகா சர்மா தமிழ், இந்தி என பான் இந்தியா நடிகையாக மாறி உள்ளார்.

காபி வித் காதல்: தெலுங்கில் 2 படங்களில் நடித்த மாளவிகா சர்மா தமிழில் சுந்தர். சி இயக்கத்தில் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த், அம்ரிதா அய்யர், ரைசா வில்சன், டிடி நீலகண்டன் உள்ளிட்ட பலர் நடித்த காபி வித் காதல் படத்தில் மெழுகு சிலையாக நடித்து இளைஞர்களை வெகுவாக கவர்ந்தார்.

ஆனால், தமிழில் மாளவிகா சர்மா நடித்த அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில், சமீபத்தில் வெளியான சல்மான் கான் படத்தின் மூலம் பாலிவுட்டுக்கே பறந்து விட்டார் மாளவிகா சர்மா.

Malavika Sharma gives slippers and school bags to kids

செருப்பு மாட்டிவிட்ட மாளவிகா சர்மா: வெயில் காலத்தில் தான் செருப்பின் அருமை என்னவென்பது தெரியும். 40 பள்ளிகளில் உள்ள பல ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வரும் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து அரசு பள்ளிக்குச் சென்ற நடிகை மாளவிகா சர்மா அந்த மாணவர்களுக்கு செருப்புகளையும், புத்தகங்கள், புத்தகப் பைகளையும் பரிசாக வழங்கி உள்ளார்.

அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து தியோகரில் உள்ள தேவ்ஸ்ரீ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து இந்த பணியை ஆற்றி உள்ளேன் என்றும் நீங்களும் உதவ நினைத்தால், அந்த தொண்டு நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம் என பதிவிட்டுள்ளார்.

Malavika Sharma gives slippers and school bags to kids

பெரிய மனசுங்க உங்களுக்கு: நடிகை மாளவிகா சர்மா பள்ளிக் குழந்தைகளின் பாதங்களை தொட்டு செருப்பு மாட்டி விடும் போட்டோக்களை பார்த்த அவரது ரசிகர்கள் பெரிய மனசுங்க உங்களுக்கு என பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X