Malavika Sreenath: 10 நிமிஷம் அட்ஜெஸ்ட் பண்ணா.. உன் ரேஞ்சே மாறிடும்.. மாளவிகாவுக்கு நேர்ந்த கொடுமை!

திருவனந்தபுரம்: மலையாள திரையுலகின் இளம் நடிகையான மாளவிகா ஸ்ரீநாத் ஆடிஷன் சென்ற போது தனக்கு நேர்ந்த மிகவும் மோசமான அனுபவத்தை வெளிப்படையாக சமீபத்திய பேட்டியில் கூறி ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

சினிமாவில் நடிக்க சான்ஸ் கேட்டு செல்லும் பல பெண்களை வாய்ப்புத் தருவதாக தயாரிப்பாளர்கள், ஹீரோக்கள், இயக்குநர்கள் மற்றும் காஸ்டிங் இயக்குநர்கள் என பலரும் படுக்கைக்கு அழைப்பதாக தொடர் குற்றச்சாட்டுக்கள் கிளம்பி வரும் நிலையில், மாளவிகா ஸ்ரீநாத்துக்கும் அப்படியொரு கொடுமை நேர்ந்துள்ளது.

நடிகை மஞ்சு வாரியருக்கு ஒரு படத்தில் மகளாக நடிக்க வாய்ப்புத் தருவதாக அழைத்த நிலையில், அங்கிருந்த நபர் ஒருவர் மார்பகத்திலேயே கை வைத்து விட்டார் என பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

Malavika Sreenath faces horrific casting couch in Malayalam Cine Industry

மலையாள நடிகை மாளவிகா ஸ்ரீநாத்: மதுரம் மற்றும் சாட்டர்டே நைட் உள்ளிட்ட மலையாளப் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இளம் நடிகை மாளவிகா ஸ்ரீநாத் 3 ஆண்டுகளுக்கு முன்னதாக மஞ்சு வாரியருக்கு மகளாக நடிக்க ஒரு படத்தில் ஆடிஷனுக்கு அழைத்து இருந்தனர். நானும் என் அம்மா மற்றும் தங்கையை அழைத்துக் கொண்டு திரிசூரில் அவர்கள் சொன்ன இடத்துக்கு சென்றேன் அங்கே தான் அப்படியொரு மோசமான கொடுமை எனக்கு நேர்ந்தது எனக் கூறியுள்ளார்.

மேக்கப் ரூமில் மேலே கை வச்சிட்டான்: அந்த படத்திற்கான ஆடிஷன் எடுத்துக் கொண்டிருந்த நபர் என் கூந்தலை மேக்கப் ரூம் சென்று சரி செய்து விட்டு வரச் சொன்னான். நானும் அங்கே சென்ற போது திடீரென பின்னால் வந்து என் மார்பகத்தில் கையை வைத்து அழுத்தி விட்டான். கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கிட்டா உனக்கு பெரிய வாய்ப்பு வாங்கித் தருகிறேன் என்றான்.

Malavika Sreenath faces horrific casting couch in Malayalam Cine Industry

வெளியே என் அம்மா மற்றும் தங்கை இருந்தனர். நான் அங்கேயே கத்திவிட்டேன். அவனிடம் இருந்து தப்பித்துக் கொள்ள அங்கிருந்த கேமராவை தள்ளி விட்டு அவனது கவனத்தை திசை திருப்பி விட்டு வெளியே ஓடி வந்து விட்டேன் எனக் கூறி மலையாள திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார் மாளவிகா ஸ்ரீநாத்.

Malavika Sreenath faces horrific casting couch in Malayalam Cine Industry

நிறைய பொறுக்கிங்க இருங்கானுங்க: பல இடங்களில் சினிமாக்காரர்கள் கண்ணியமாக நடந்து கொண்டாலும், சில இடங்களில் நிறைய பொறுக்கிங்க இப்படி பெண்களை அட்ஜெஸ்ட் பண்ணச் சொல்லவதும், அவர்கள் அனுமதியின்றி மேலே கை வைப்பதுமாக மோசமாக நடந்து கொள்கின்றன. சினிமாவுக்கு வரும் புதிதில் நமக்கு இப்படி நேர்ந்து விட்டதே என வெளியே சொன்னால், அதன் பிறகு பிளாக் மார்க் வைத்து இண்டஸ்ட்ரியை விட்டே ஒதுக்கி விடுவார்கள் என்கிற பயத்தால் தான் பலரும் இதுபோன்ற விஷயங்களை வெளியே சொல்லவே பயப்படுகின்றனர் என்றும் கூறியுள்ளார் மாளவிகா ஸ்ரீநாத்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X