பிரேக் போதும்: மீண்டும் நடிக்க வரும் தல ஹீரோயின்
சென்னை: மாளவிகா மீண்டும் படங்களில் நடிக்க வருகிறார்.
அஜித்தின் உன்னைத் தேடி படம் மூலம் நடிகையானவர் மாளவிகா. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் நடித்தார். கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வந்த அவர் திருமணமாகி கர்ப்பமான பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டார்.
மாளவிகாவுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளார்கள்.

மாளவிகா
கணவர் சுமேஷ் மேனன், குழந்தைகளுடன் மும்பையில் வசித்து வரும் மாளவிகாவுக்கு மீண்டும் நடிக்கும் ஆசை வந்துள்ளது. குழந்தைகள் ஓரளவுக்கு வளர்ந்துவிட்டதால் தனது நடிப்பை தொடர அவர் முடிவு செய்துள்ளார்.

கதை
நடிப்பை தொடர முடிவு செய்த கையோடு கதை கேட்கத் துவங்கிவிட்டாராம் மாளவிகா. அவருக்கு ஏற்ற கதாபாத்திரம் கிடைத்தால் மாளவிகாவை விரைவில் பெரிய திரையில் காணலாம்.

அன்பு
தமிழ் ரசிகர்களுக்கு எப்பொழுதுமே என் மீது தனி அன்பு உண்டு. வாளமீன் பாடல் எனக்கு பெரிய பெயர் வாங்கிக் கொடுத்தது. நான் மீண்டும் நடிப்பதற்கான நேரம் வந்துவிட்டது என்று மாளவிகா தெரிவித்துள்ளார்.

அக்கா
ஹீரோயினாக பார்த்த மாளவிகாவை அண்ணி, அக்கா கதாபாத்திரங்களில் பார்க்க ரசிகர்களுக்கு ஆரம்பத்தில் கஷ்டமாகத் தான் இருக்கும். யார் கண்டால், அவர் சில முன்னணி சீனியர் ஹீரோக்களுக்கு கூட ஜோடியாக நடிக்கலாம்.


Click it and Unblock the Notifications











