தமிழுக்கு வரும் மலையாள 'காக்டெயில்'- அனன்யா ஹீரோயின்!

By Shankar

மலையாளத்தில் வெற்றி பெற்ற காக்டெயில் படம் தமிழில் ரீமேக் ஆகிறது.

சமீப காலமாக, நிறைய மலையாளப் படங்கள் தமிழில் இறக்குமதியாகி வருகின்றன. ட்ராபிக் படம் சென்னையில் ஒரு நாள் என தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்றது நினைவிருக்கலாம்.

மலையாள இறக்குமதி

மலையாள இறக்குமதி

ஏற்கெனவே தயாராகிவரும் ஜன்னல் ஓரம், புலிவால் , உஸ்தாத் ஹோட்டல், மாலினி 22 பாளையங்கோட்டை போன்ற படங்கள் மலையாளப் படங்களின் தழுவல்களே.

காக்டெயில்

காக்டெயில்

இந்த நிலையில் காக்டெயில் படம் தமிழில் தயாராகிறது. இந்தப் படத்தின் தமிழ் உரிமையை வாங்க பலரும் போட்டி போட்ட நிலையில், ஸ்பெல்பௌன்ட் பிலிம்ஸ் ஐஎன்சி என்ற பட நிறுவனம் அந்த உரிமையைப் பெற்று தயாரிப்பில் இறங்கியுள்ளது. இப்படத்துக்கு இன்னமும் பெயரிடப் படவில்லை.

அனன்யா

அனன்யா

சீனு - நிகேஷ்ராம் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக அனன்யா நடிக்கிறார். முன்னணி நகைச்சுவை நடிகர் ஒருவர் நடிக்கிறார் .

'அழகிய தமிழ் மகன்' பரதன்

'அழகிய தமிழ் மகன்' பரதன்

படத்தின் இயக்குனர் பொறுப்பேற்றிருப்பவர் பரதன் . இவர் தில், தூள், கில்லி, மதுர மற்றும் தற்போது அஜீத் நடிக்கு வீரம் போன்ற படங்களின் வசனகர்த்தா.

விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கியவரும் இவரே.

சவாலான திரைக்கதை

சவாலான திரைக்கதை

படம் குறித்து பரதன் கூறுகையில், "திரைக்கதைக்கு சவாலான படம் என்பதால் இந்தப் படத்தை விரும்பி இயக்குகிறேன். சிறப்பான தமிழ் படமாக இது வரும். படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கி ஒரே கட்டமாக நடைபெற்று முடிவடைகிறது," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X