பிரபல வில்லன் நடிகர் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய மலையாள சினிமா!

சென்னை: பிரபல மலையாள நடிகரான பிசி ஜார்ஜ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 74.

தமிழ் சினிமாவை போன்றே மலையாள சினிமாவிலும் மரணங்கள் தொடர்ந்து வருகின்றன.

இந்த வாரத்தில் மட்டுமே எழுத்தாளர் டென்னிஸ் ஜோசப் மற்றும் இயக்குநரும் எழுத்தாளருமான மடம்பு குஞ்சுக்குட்டன் மரணமடைந்தனர்.

வில்லன் நடிகர் மரணம்

வில்லன் நடிகர் மரணம்

இந்நிலையில் மலையாள சினிமாவின் பிரபல வில்லன் நடிகரான பிசி ஜார்ஜ் மரணமடைந்துள்ளார். 74 வயதான ஜார்ஜ் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று காலை ஜார்ஜ் சிகிச்சை பலனின்றி காலமானார்.

60க்கும் மேற்பட்ட படங்கள்

60க்கும் மேற்பட்ட படங்கள்

ஜார்ஜ்க்கு மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். பிசி ஜார்ஜ் அம்பா அம்பிகா அம்பிளிகா என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவுக்கு அறிமுகமானார். இதுவரை 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

உடல் அடக்கம்

உடல் அடக்கம்

அதர்வம், சாணக்யன், இன்னலே, பெருவண்ணபுரத்தே விஷேஷங்கள், சங்கம் ஆகிய படங்களில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. மறைந்த ஜார்ஜின் உடல் கொச்சியில் இறுதி சடங்குகளுக்கு பின் அடக்கம் செய்யப்பட்டது.

ரசிகர்கள் சோகம்

ரசிகர்கள் சோகம்

சிறந்த வில்லன் நடிகராக வலம் வந்த ஜார்ஜின் மறைவுக்கு கேரள திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சினிமா பிரபலங்கள் மரணமடைவது சக சினிமா கலைஞர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X