தமிழ் படங்களில் நடிக்காததற்கு இதுதான் காரணம்.. மனம் திறந்த பிருத்விராஜ்.. என்ன இப்படி சொல்லிடாரு!

சென்னை : தமிழில் தொடர்ந்து நடிக்காததற்கு இதுதான் காரணம் என நடிகர் பிருத்விராஜ் மனம் திறந்து பேசியுள்ளார்.

மலையாளத்தில் தொடர் வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் பிருத்விராஜ் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்.

இயக்குனர் கேவி ஆனந்தின் அறிமுக திரைப்படமான "கனா கண்டேன்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான பிருத்விராஜ், கனா கண்டேன், பாரிஜாதம், நினைத்தாலே இனிக்கும், மொழி என பல நேரடி தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகர் பிருத்விராஜ்

நடிகர் பிருத்விராஜ்

நடிகர் பிருத்விராஜ் இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத் தன்மைக் கொண்டவர் பிருத்விராஜ். இவர் நடிப்பில் உருவான கடுவா என்ற திரைப்படம் என்ற திரைப்படம் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்பாராத சில பிரச்சனைகளால், ஜூலை 7ந் தேதி படம் வெளியாகும் என பிருத்விராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டதற்காக திரைப்பட ஆர்வலர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

கடுவா

கடுவா

இப்படத்தில் விவேக் ஓபராய், சம்யுக்தா மேனன், அர்ஜுன் அசோகன் உட்பட பலர் நடித்துள்ளனர். கடுவா படத்தை வாஞ்சிநாதன், ஜனா, உள்ளிட்ட படங்களை இயக்கிய ஷாஜி கைலாஷ் இயக்கியுள்ளார். படத்தை பிருத்விராஜ் புரொடக்‌ஷனும் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்தின் லிஸ்டின் ஸ்டீபனும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படம் பான் இந்தியா படமாக மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.

பெருமை அடைகிறேன்

பெருமை அடைகிறேன்

இந்நிலையில், சென்னையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பிருத்விராஜ் தமிழில் குறைவான படங்களில் தான் நான் நடித்திருக்கிறேன். அந்தப் படங்கள் பற்றி நினைக்கும்போது இனிமையான நினைவுகளாக இருக்கிறது. மொழி மாதிரியான ஒரு படத்தை தமிழ் சினிமா எனக்குக் கொடுத்ததை நினைத்து பெருமை அடைகிறேன். ஆனாலும் ஏன் தமிழ்ப் படங்களில் தொடர்ந்து் நடிக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது என்றார்.

Recommended Video

பத்திரிக்கையாளர்களுக்கு பதிலளித்த Prithviraj| Kaduva Movie Press Meet *Kollywood |Fimibeat
இதுதான் காரணம்

இதுதான் காரணம்

காவியத் தலைவன் படத்துக்குப் பிறகு சரியான கதைகள் எனக்கு அமையவில்லை. என்னை சிலிர்க்க வைக்கிற, அல்லது நான் பண்ணாத கேரக்டர்கள் அமையவில்லை. பிருத்விராஜ் என்றால் இப்படித்தான் நடிப்பார் என்ற யாரும் நினைக்ககூடாது. அனைவரும், நினைத்து பார்க்காத கதாபாத்திரத்தில் நடிப்பதை நான் விரும்புகிறேன் இப்போது சில இயக்குநர்களிடம் கேட்டிருக்கிறேன். விரைவில் தமிழ் படங்களில் நடிப்பேன் என்றார் பிருத்விராஜ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X