அடித்து துன்புறுத்தியதால் இளம் மனைவி தற்கொலை.. பிரபல நடிகரை தட்டி தூக்கிய போலீஸ்.. பரபரப்பு!

திருவனந்தபுரம்: பிரபல நடிகர் அடித்து துன்புறுத்தியதால் மனைவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் உன்னி தேவ். இவர் இன்ஸ்பெக்டர் தாவூத் இப்ராஹீம், ஆடு, ஷிபு உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு வெம்பயம் பகுதியை சேர்ந்த பிரியங்கா என்பவருடன் கடந்து 2019ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

துன்புறுத்திய நடிகர்

துன்புறுத்திய நடிகர்

இருவரும் எர்ணாகுளம் அங்கமாலி பகுதியில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் நடிகர் உன்னி தனது மனைவியை அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது.

பெற்றோர் வீட்டில் தற்கொலை

பெற்றோர் வீட்டில் தற்கொலை

இதனால் கடந்த 11 ஆம் தேதி பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார் பிரியங்கா. இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி புதன் கிழமை பகல் 2 மணியளவில் தனது படுக்கையறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் பிரியங்கா. அவருக்கு வயது 26.

போலீஸில் புகார்

போலீஸில் புகார்

பிரியங்கா தற்கொலை செய்து கொள்வதற்கு ஒரு நாள் முன்னதாக வட்டப்பாறா காவல் நிலையத்தில் தனது கணவர் மீது புகார் அளித்தார். தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் பணம் கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார் பிரியங்கா.

உடம்பில் காயங்கள்

உடம்பில் காயங்கள்

இந்நிலையில் புகார் அளித்த மறு நாளே பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரியங்கா வீட்டிற்கு வந்த போது அவரது உடம்பில் காயங்கள் இருந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியிருந்தனர்.

குடும்பத்தினர் குற்றச்சாட்டு

குடும்பத்தினர் குற்றச்சாட்டு

மேலும் பிரியங்காவின் சாவுக்கு அவரது கணவர் உன்னி தேவ்தான் காரணம் என்றும் அவரது அடியையும் கொடுமையையும் தாங்க முடியாமல்தான் பிரியங்கா தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீஸில் புகார் அளித்தனர்.

கைது செய்யப்பட்ட நடிகர்

கைது செய்யப்பட்ட நடிகர்

பிரியங்காவின் பெற்றோர் அளித்த புகாரை தொடர்ந்து வட்டப்பாறா போலீசார் உன்னி தேவ்விடம் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் உன்னி தேவ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் 15 நாட்களுக்கு பிறகு நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.

பிரபல நடிகரின் மகன்

பிரபல நடிகரின் மகன்

மனைவி தற்கொலை விவகாரத்தில் பிரபல மலையாள நடிகர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த பிரபல நடிகர் ராஜன் பி தேவ்வின் மகன் உன்னி தேவ் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X