ஷாக்.. பிரபல நடிகரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை.. உடம்பில் காயங்கள்.. நடிகர் மீது பெற்றோர் புகார்!
சென்னை: திருமணமான ஒன்றரை ஆண்டுக்குள் பிரபல நடிகரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் உன்னி தேவ். இவர் இன்ஸ்பெக்டர் தாவூத் இப்ராஹீம், ஆடு, ஷிபு உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
இவருக்கு வெம்பயம் பகுதியை சேர்ந்த பிரியங்கா என்பவருடன் கடந்து 2019ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

துன்புறுத்திய நடிகர்
இருவரும் எர்ணாகுளம் அங்கமாலி பகுதியில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் நடிகர் உன்னி தனது மனைவியை அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது.

பெற்றோர் வீட்டில் தற்கொலை
இதனால் பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார் பிரியங்கா. இந்நிலையில் கடந்த புதன் கிழமை பகல் 2 மணியளவில் தனது படுக்கையறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் பிரியங்கா. அவருக்கு வயது 26.

போலீஸில் புகார்
பிரியங்கா தற்கொலை செய்து கொள்வதற்கு ஒரு நாள் முன்னதாக வட்டப்பாறா காவல் நிலையத்தில் தனது கணவர் மீது புகார் அளித்துள்ளார். தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் பணம் கேட்டு தாக்குவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார் பிரியங்கா.

உடம்பில் காயங்கள்
இந்நிலையில் புகார் அளித்த மறு நாளே பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரியங்கா வீட்டிற்கு வந்த போது அவரது உடம்பில் காயங்கள் இருந்ததாக அவரது சகோதரர் குற்றம்சாட்டியுள்ளார்.

தாக்கிய உன்னி
இதனிடையே பிரியங்காவின் உறவினரான ரேஷ்மா தெரிவித்துள்ள தகவலில், இருவரும் சந்தோஷமாகதான் வாழ்க்கையை தொடங்கினார்கள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல உன்னி, பிரியங்காவை தாக்க தொடங்கிவிட்டார்.

பணத்தை ட்ரான்ஸ்ஃபர்
அவரது நகைகள் அனைத்தையும் உன்னி விற்று செலவு செய்து விட்டார். அதுமட்டுமின்றி பிரியங்காவின் அம்மாவும் அவர்கள் கேட்ட போதெல்லாம் பணத்தை ட்ரான்ஸ்பர் செய்துள்ளார்.

கடித்த தழும்புகள் காயங்கள்
உன்னி அவரை அடித்து உதைக்கும் காட்சியையும் வீடியோவாக பதிவு செய்திருந்தார் பிரியங்கா. வீட்டிற்கு வந்ததும் உன்னி மீது போலீஸில் புகார் அளித்தார், அவர் மீது வழக்கு தொடரும் முடிவில் இருந்தார்.

வழக்கு தொடரும் முடிவு
உன்னி அவரை அடித்து உதைக்கும் காட்சியையும் வீடியோவாக பதிவி செய்திருந்தார் பிரியங்கா. வீட்டிற்கு வந்ததும் உன்னி மீது போலீஸில் புகார் அளித்தார், அவர் மீது வழக்கு தொடரும் முடிவில் இருந்தார்.

தண்டிக்கப்பட வேண்டும்
ஆனால் ஒரு போன் கால் வந்தது. அதில் பேசிய பிறகுதான் பிரியங்கா இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார். உன்னி கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு பிரியங்காவின் உறவினர் ரேஷ்மா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











