மலையாள சினிமாவின் மாஸ்டர் ரைட்டர்.. தேசிய விருது பெற்ற டைரக்டர் திடீர் மரணம்.. பிரபலங்கள் அதிர்ச்சி!

சென்னை: மலையாள சினிமாவின் மாஸ்டர் எழுத்தாளர் என அழைக்கப்பட்ட இயக்குநர் டென்னிஸ் ஜோசப் திடீர் கார்டியாக் அரெஸ்ட்டால் காலமானார். அவருக்கு வயது 63.

சினிமாத்துறை கடந்த சில மாதங்களாக தொடர் இழப்புகளை சந்தித்து வருகிறது. தமிழ் சினிமா மட்டுமின்றி மொத்த தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட்டிலும் உயிரிழப்புகள் தொடர்ந்து வருகின்றனர்.

ஒரு பக்கம் கொரோனாவின் கோர நாக்குகளுக்கு பலியாகும் நட்சத்திரங்கள், மறுபக்கம் மாரடைப்பு, கார்டியாக் அரெஸ்ட் மற்றும் உடல் நலக்குறைவு என மரணித்து வருகின்றனர்.

மாஸ்டர் எழுத்தாளர்

மாஸ்டர் எழுத்தாளர்

இந்நிலையில் மலையாள சினிமாவின் மாஸ்டர் எழுத்தாளர் என அழைக்கப்பட்டு வந்த பிரபல எழுத்தாளரும் இயக்குநருமான டென்னிஸ் ஜோசப் திடீர் கார்டியாக் அரெஸ்ட்டால் காலமாகியுள்ளார்

45க்கும் மேற்பட்ட படங்கள்

45க்கும் மேற்பட்ட படங்கள்

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த டென்னிஸ் ஜோசப், பத்திரிக்கையாளராக தனது கேரியரை தொடங்கினார். இதுவரை 45க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை எழுதியுள்ளார் டென்னிஸ் ஜோசப்.

5 படங்கள் இயக்கம்

5 படங்கள் இயக்கம்

1980 மற்றும் 90களில் இயக்குநர் ஜோஷி மற்றும் எழுத்தாளர் டென்னிஸ் ஜோசப் கூட்டணியில் வெளியான பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளன. 5 திரைப்படங்களை இயக்கியுள்ளார் டென்னிஸ் ஜோசப்.

தேசிய விருது

தேசிய விருது

இதில் 1988ஆம் ஆண்டு வெளியான மனு அங்கிள் திரைப்படம் குழந்தைகளுக்கான சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்றது. கேரள மாநில அரசின் விருதையும் பெற்றது இப்படம்.

திடீர் மாரடைப்பு

திடீர் மாரடைப்பு

அவரது திரைக்கதையில் உருவான படங்கள் மம்மூட்டி மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் ஆகியோருக்கு திருப்புமுனைகளை கொடுத்துள்ளன. இந்நிலையில் நேற்றிரவு குடும்பத்தினருடன் இருந்த டென்னிஸ் ஜோசப் திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார்.

வரும் வழியிலேயே மரணம்

வரும் வழியிலேயே மரணம்

அவரை உடனடியாக குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

பிரபலங்கள் இரங்கல்

பிரபலங்கள் இரங்கல்

கார்டியாக் அரெஸ்ட் காரணமாக டென்னிஸ் ஜோசப் மரணமடைந்துள்ளார். அவரது திடீர் மரணம் மலையாள சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு நடிகர்கள் மோகன் லால், மம்மூட்டி, சுரேஷ் கோபி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X