மலையாள மெகா ஸ்டார் மம்முட்டிக்கு இன்று பிறந்தநாள்.. திரையுலகினர் ஒன்று கூடி வாழ்த்துக்கள்

கொச்சி : மலையாளத் திரையுலகில் தனது ஈடு இணையற்ற நடிப்பின் மூலம் திரையுலகை ஆட்டிப் படைத்து வரும் உச்ச நடிகர்களில் மிக முக்கியமானவராக வலம் வந்து கொண்டிருப்பவர் மெகாஸ்டார் மம்முட்டி.

Recommended Video

சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு முத்தம் கொடுக்கணும் | ACTRESS SANJANA INTERVIEW |V-CONNECT |FILMIBEAT TAMIL

மலையாள திரை உலகில் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக கொடிகட்டி பறந்து வரும் மம்முட்டி மலையாளத்தில் மட்டும் அல்லாமல் தமிழ் கன்னடம் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என பல மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவ்வாறு தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் இந்திய சினிமாவின் மிகச் சிறந்த நடிகராக மகுடம் சூடி வரும் நடிகர் மம்முட்டி செப்டம்பர் 7 ஆம் தேதியான இன்று தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி திரையுலகைச் சேர்ந்த பலரும் ஒன்றுகூடி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்ற நிலையில் இவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களின் மூலமாக வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

நாற்பது ஆண்டுகளுக்கும்

நாற்பது ஆண்டுகளுக்கும்

எண்ணற்ற வெற்றித் திரைப்படங்கள், அசைக்க முடியாத பல ரெக்கார்டுகள், பத்மஸ்ரீ, தேசிய விருது உள்ளிட்ட பல கவுரவ விருதுகள் என மலையாளத் திரையுலகை தனது நடிப்பின் மூலம் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு வருபவர் நடிகர் மம்முட்டி.

நியூ டெல்லி

நியூ டெல்லி

ஆரம்ப காலத்தில் சினிமாவில் சஜின் என்ற பெயரில் நடித்துவந்த மம்முட்டி 1980களில் மிகப் பெரிய நடிகராக விஸ்வரூபம் எடுத்தார். அவ்வாறு வெளியான "நியூ டெல்லி" திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றியை கொடுத்த நிலையில் இன்றுவரை கிட்டத்தட்ட மூன்று தேசிய விருதுகள் பெற்று தென்னிந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

முழுநீள ஹீரோவாக

முழுநீள ஹீரோவாக

1971 ஆம் ஆண்டு வெளியான அனுபவங்கள் பாலிசகள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான மம்முட்டி "சபர்மதி" உள்ளிட்ட தியேட்டர் டிராமாகளிலும் நடித்து வந்தார். பின் "தேவலோகம்" திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்த மம்முட்டி பின் அந்த திரைப்படம் முழுமையாக முடிக்கப்படாத காரணத்தினால், "வில்க்கண்ணுண்டு ஸ்வப்னங்கள்" என்ற திரைப்படத்தில் முழுநீள ஹீரோவாக பலராலும் அறியப்பட்டார். அதன்பிறகு தொட்டதெல்லாம் வெற்றிதான் என்றது போல தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் இன்றுவரை பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து பல்வேறு வசூல் ரெக்கார்ட்களை முறியடித்து வருகிறார்

தென்னிந்தியாவிலேயே அதிக வசூல்

தென்னிந்தியாவிலேயே அதிக வசூல்

அகிம்சா, யாவநிகா, சோதனம், ஆள்கோட்டதில் தனியே, அடியோழுக்குகல் என தொடர் வெற்றிப் படங்களில் சஜின் என்ற பெயரில் நடித்து வந்த மம்முட்டியின் படயோட்டம் மற்றும் ஈ நாடு போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று அப்பொழுது தென்னிந்தியாவிலேயே அதிக வசூல் செய்த திரைப்படங்களில் முன்னணியில் இருந்தது.

பிரம்மாண்ட பொருட்செலவில்

பிரம்மாண்ட பொருட்செலவில்

மேலும் படயோட்டம் திரைப்படம் முதன்முதலில் 70 எம்எம்-ல் எடுக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையும், கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கப்பட்ட முதல் மலையாள திரைப்படம் என்ற பெருமையும் இந்த திரைப்படம் பெற்றுள்ளது.

முதல் தேசிய விருது

முதல் தேசிய விருது

மிகக்குறுகிய காலத்திலேயே கிட்டத்தட்ட 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து சாதனை புரிந்த மம்முட்டி 1986 ஆம் ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 35 திரைப்படங்களில் நடித்திருந்தார். இவ்வாறு அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக விஸ்வரூபம் எடுத்து வந்த மம்முட்டி வடக்கன் வீரகதா, மதிலுகல் திரைப்படங்களில் நடித்ததற்காக முதல் தேசிய விருது பெற்றார்.

புகழ்பெற்ற நடிகராக

புகழ்பெற்ற நடிகராக

இவ்வாறு தனது முதல் தேசிய விருதை பெற்று இந்திய அளவில் தன் கவனத்தை ஈர்த்த மம்முட்டி இன்றுவரை கிட்டத்தட்ட மூன்று தேசிய விருதுகள், பல கேரள விருதுகள், பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வென்று இன்றுவரை புகழ்பெற்ற நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழ் திரையுலகிலும்

தமிழ் திரையுலகிலும்

மேலும் 1998 ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு "பத்ம ஸ்ரீ" விருது வழங்கி கௌரவப்படுத்தியது. இவ்வாறு பல்வேறு விருதுகளுக்கும் பாராட்டுக்களுக்கும் ரசிகர்களின் பேரன்புக்கும் சொந்தக்காரரான மம்முட்டி மலையாளத் திரைப்படங்களில் மட்டும் அல்லாமல் தமிழிலும் பல படங்களில் நடித்து தமிழ் திரையுலகிலும் பல ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார்.

தமிழில் அறிமுகம்

தமிழில் அறிமுகம்

"மௌனம் சம்மதம்" திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் காலடி பதித்த மம்முட்டி அதைத்தொடர்ந்து மறுமலர்ச்சி, கார்மேகம், ஆனந்தம், தளபதி,அழகன் உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடமும் மிகப் பிரபலமாக உள்ளார்.

தலைசிறந்த நடிகராக

தலைசிறந்த நடிகராக

இவ்வாறு கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல மொழிகளில் நடித்து இந்தியாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் மம்முட்டி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

பிறந்த நாள்

பிறந்த நாள்

இந்நிலையில் செப்டம்பர் 7ஆம் தேதியான இன்று மம்முட்டி தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி திரையுலகினர் பலரும் ஒன்றுகூடி இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இவரது ரசிகர்களும் சமூக வலைதள வாயிலாக தங்களது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X