'துருவ நட்சத்திரம்' படத்தில் வில்லனாக 'திமிரு' நடிகர்!
Recommended Video

சென்னை : கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'துருவ நட்சத்திரம்' படத்தில் வில்லனாக நடிக்கவிருப்பது யார் எனும் கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. மலையாள நடிகர் விநாயகன் தான் விக்ரமுக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார்.
கௌதம் மேனன் இயக்கும் படங்களில் வில்லனும் அதிகமாகக் கவனிக்கப்படுவார். அவரது இயக்கத்தில் வெளிவந்த படங்களில் வில்லனுக்கும் பிரத்யேகமான நியாயம் இருப்பது போலக் கதையை உருவாக்கி இருப்பார். அதுதான், இந்தப் படத்தில் வில்லன் நடிகர் மீதான எதிர்பார்ப்புக்குக் காரணம்.

மலையாளத்தில் வரவேற்பு பெற்ற திரைப்படங்களான 'களி', 'கம்மட்டி பாடம்' ஆகிய திரைப்படங்களில் நடித்த விநாயகன் ஏற்கெனவே, தமிழில் விஷால் நடித்த 'திமிரு' படத்தில் மாற்றுத்திறனாளியாகவும், சிம்பு நடித்த 'சிலம்பாட்டம்' படத்திலும் நடித்தவர். இவர் 'துருவ நட்சத்திரம்' படத்தில் நடிப்பதால் தமிழில் பிரபலமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரீது வர்மா, ஐஷ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன், ராதிகா ஆகியோரும் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். சென்னை, பல்கேரியா, துருக்கி ஆகிய பகுதிகளில் ஷூட்டிங் நடைபெற்ற இந்தப் படம் ஃபைனான்ஸ் பிரச்னைகளாலும், ஸ்ட்ரைக்கினாலும் முடங்கி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











