தனி ஒருவன் பட நடிகர் திடீர் மரணம்.. மருத்துவமனையில் உயிர் பிரிந்தது.. ரசிகர்கள் அதிர்ச்சி!
சென்னை: தனி ஒருவன், கொடி உட்பட பல தமிழ் படங்களில் நடித்த பிரபல மலையாள நடிகரான அனில் முரளி காலமானார். அவருக்கு வயது 56.
Recommended Video
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தவர் நடிகர் அனில் முரளி. மலையாள தொலைக்காட்சித்துறையில் பணியாற்றிய அனில் முரளி.
பின்னர் 1993ஆம் ஆண்டு கன்னியாகுமரியில் ஒரு கவிதா என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

200க்கும் மேற்பட்ட படங்கள்
ஏராளமான மலையாள படங்களில் வில்லன் நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார் அனில் முரளி. மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

திடீர் மரணம்
தமிழில் நிமிர்ந்து நில், தனி ஒருவன், கனிதன், அப்பா, கொடி, தொண்டன், மிஸ்டர் லோக்கல், நாடோடிகள் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவரது நடிப்பில் தமிழில் கடைசியாக வால்டர் படம் ரிலீஸானது. இந்நிலையில் நடிகர் அனில் முரளி திடீரென காலமானார்.

உயிர் பிரிந்தது
கல்லீரல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் அனில் முரளி கொச்சியில் உள்ள அஸ்டர் மெடிசிட்டி என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.
திரையுலகம் இரங்கல்
அவரது மறைவு மலையாளம் மட்டுமின்றி ஒட்டு மொத்த திரைத்துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மரண செய்தியை கேட்டு ரசிகர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். நடிகர் பிரித்விராஜ் உட்பட திரைத்துறையினர் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











