விஷால் 31ல் வில்லனாக நடிக்கப்போவது இந்த மலையாள நடிகரா.. அடி தூள்!

சென்னை : எனிமி படத்தை முடித்துவிட்டு தன்னுடைய 31-வது படத்தின் வேலைகளை நடிகர் விஷால் தொடங்கிவிட்டார்.

கடந்த மாதமே தொடங்க இருந்த படப்பிடிப்பு கொரோனாவால் தடைபட்டு இப்பொழுது ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது.

விஷால் 31இல் நடிக்க இருக்கும் நடிகர் நடிகைகளின் பெயர்கள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் வில்லனாக பிரபல மலையாள நடிகர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மிருணாளினி ஹீரோயினாக

மிருணாளினி ஹீரோயினாக

ஆறடி உயரம் அசத்தலான நடிப்பு என சினிமாவில் வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பின் மூலம் பல திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். இதுவரை நண்பர்களாக இருந்த விஷால் மற்றும் ஆர்யா எனிமி என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை துபாயிலும் நடைபெற்று முடிந்துள்ளது.

குறும்பட இயக்குனர்

குறும்பட இயக்குனர்

இதில் நடிகை மிருணாளினி ஹீரோயினாக நடித்துள்ளார். எனிமியை முடித்த கையோடு தனது 31வது படத்தின் வேலைகளை விஷால் விறுவிறுப்பான வேகத்தில் தொடங்கியுள்ளார். குறும்பட இயக்குனர் சரவணன் இப்படத்தை இயக்குகிறார் . விஷால் ஃபிலிம் ஃபேக்ட்ரி தயாரிக்கிறது

ஒரே ஷெட்யூலில் முடிக்க

ஒரே ஷெட்யூலில் முடிக்க

கடந்த மாதமே தொடங்க இருந்த படப்பிடிப்பு கொரோனா 2-வது அலை காரணமாக தடைபட்டு போக இப்பொழுது தளர்வுகள் உடன் படப்பிடிப்புக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்க நேரடியாக பிளைட் பிடித்து ஹைதராபாத் சென்ற படக்குழு ராமோஜி ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பை தொடங்கியுள்ளது. விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

வில்லனாக

வில்லனாக

விஷால் 31 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சென்ற மாதம் வெளியாகியது. டைட்டில் எதுவும் அறிவிக்கப்படாமல் நாட் ய காமன் மேன் என மட்டும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது. இந்நிலையில் இதில் வில்லனாக நடிக்க பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் பாபுராஜ் ஏற்கனவே ஜனா, ஸ்கெட்ச் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஒரே ஷெட்யூலில் படப்பிடிப்பை முடிக்க செம ஸ்பீடில் வேலைகள் நடைபெற்றுவருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X