இரண்டு திருமணம்.. இரண்டு விவாகரத்து.. மூன்றாவது திருமணம் செய்த நடிகர் பாலா.. பெண் யார் தெரியுமா?
சென்னை: இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரரான நடிகர் பாலா நேற்று விரைவில் மூன்றாவது திருமணம் செய்வேன் என்று பத்திரிக்கையாளர்களிடம் கூறி உள்ள நிலையில், இன்று காலை மூன்றாவது திருமணம் செய்துள்ளார். திருமண போட்டோவை அவர் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.
மலையாள நடிகரான பாலா, தமிழில் அன்பு, 'அப்பா அம்மா செல்லம்' வீரம் உள்ளிட்ட படத்தில் நடித்துள்ளார். இவர் 2010 ஆம் ஆண்டு பாடகி அம்ருதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா என்கிற மகள் இருக்கும் நிலையில் இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். பாடகி அமிர்தா, பாடகி என்பதை தாண்டி இசையமைப்பாளர், பாடல் ஆசிரியர் என பன்முக திறமை கொண்டவராக இருக்கிறார்.

மலையாள நடிகர் பாலா: அம்ருதாவை பிரிந்த பாலா, சில வருடங்களாக தனிமையில் வாழ்ந்து வந்த நிலையில், 2021ம் ஆண்டு கேரளாவை சேர்ந்த டாக்டர் எலிசபெத் என்பவரை இரண்டாவதாக ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். பாலா கல்லீரல் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்த போது, பாலாவை உடன் இருந்து கவனித்துக்கொண்டார் எலிசபெத். அதன்பின் இவர்களுக்குள் என்ன பிரச்சனை ஏற்பட்டது என்று தெரியவில்லை. தற்போது இரண்டாவது மனைவியுடனும் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது.

ஜாமீனில் வந்த பாலா: பாலாவின் முதல் மனைவி அம்ருதா அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட பாலா, ஜாமீனில் வெளியே இருக்கும் நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அதில்,தன்னிடம் ரூ.250 கோடி சொத்து இருக்கிறது என்றும், தனது குடும்ப சொத்தில் இருந்து பங்காக இந்த ரூ.250 கோடி வந்ததாகவும், இந்த சொத்து குறித்த அறிவிப்பு வெளியானதும் தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் வருகிறது. இதனால், கேரளாவை விட்டு வேறு எங்காவது சென்றுவிடலாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டேன் என்றார். மேலும், விரைவில் மூன்றாவது முறையாக சட்ட ரீதியாக திருமணம் செய்து குடும்பத்துடன் வாழ விரும்புகிறேன் என்று பேசி இருந்தார்.

மணப்பெண் யார்: நேற்று மூன்றாவது திருமணம் செய்ய இருப்பதாக பாலா கூறிய நிலையில்,இன்று மூன்றாவது திருமணம் செய்து கொண்ட போட்டோவை ஷேர் செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். எர்ணாகுளம் கலூர் பாவகுளம் கோவிலில் இன்று காலை 8.30 மணிக்கு திருமணம் நடந்துள்ளது. நடிகர் பாலாவின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் விழாவில் கலந்து கொண்டனர். பாலா மூன்றாவதாக திருமணம் செய்து கொண்ட பெண் அவரின் உறவுக்கார பெண் கோகிலா .இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் இவருக்கு மலையாளம் தெரியாது என்ற தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











