Bala: யாருடா வேலைக்காரி.. உன் பொண்டாட்டி பத்தி பேசவா? கொந்தளித்த பாலா!
சென்னை: இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரரான நடிகர் பாலா கடந்த அக்டோபர் மாதம் கோகிலா என்ற பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். கோகிலா குறித்து பத்திரிக்கையில் வந்த செய்தியால் கடுப்பான பாலா, என் மனைவி குறித்து பேச யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது என்று இன்ஸ்டாகிராமில் வீடியோ பத்திரிக்கையாளர்களை விளாசி உள்ளார்.
அந்த வீடியோவில் இன்று நாங்கள் இருவரும், வருத்தத்தில் இருக்கிறோம். அதற்கு காரணம் இந்த மீடியாக்கள் தான். அடுத்தவர்களின் மனைவியைப் பற்றி நீங்கள் எப்படி ஒரு தவறான செய்தியை எழுதலாம். என் மனைவி கோகிலா வேலைக்காரி என்றும், வேலைக்காரியின் மகள் என்று எழுதிருக்கிறீர்கள். இதுதான் மீடியாவின் தர்மமா? என் மனைவியை வேலைக்காரி என்று சொல்லும் உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது. நீங்கள் என் மனைவி குறித்து பேசும் போது நான் உங்களுடைய மனைவியை குறித்து பேசட்டுமா?

கொந்தளித்த பாலா: சினிமாவைப் பற்றி பேசுங்கள், நடிப்பு குறித்து பேசுங்கள், பட வெளியீடு குறித்து பேசுங்கள். என் மனைவி குறித்து பேசுவதற்கு உங்களுக்கு எங்கிருந்து தைரியம் வந்தது. அந்த உரிமையை உங்களுக்கு கொடுத்தது யார்? என் மனைவி கோகிலாவின் தந்தை பிரபலமான அரசியல் பிரமுகர். இது குறித்து நான் போலீசில் புகார் கொடுக்க சென்றேன். ஆனால், அவர் என்னை தடுத்துவிட்டு, நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறிவிட்டார். நான் இங்கு என்னால் முடிந்த உதவிகளை பலருக்கு செய்து கொண்டிருக்கிறேன். அதைப் பற்றி எல்லாம் பேசாமல் என் மனைவி குறித்து பேசுவது சரியானது அல்ல.
தவறான செய்தி ஒரு பத்திரிக்கையில் வந்தது, அதை தவறான செய்தியை அனைத்து பத்திரிக்கைகளும் என் மனைவி குறித்து எழுதுகிறார்கள். நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருப்பது யாருக்கோ பிடிக்கவில்லை என்பதால் இது போன்ற செய்தியை பரப்புகின்றனர். இந்த தவறான செய்தியை எழுதிய அந்த நபர் நிச்சயம் மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் மன்னிப்பு கேட்கும் வரை நான் சும்மா இருக்க மாட்டேன் என்று நடிகர் பாலா அந்த வீடியோவில் பேசி இருக்கிறார்.
மூன்றாவது திருமணம்: மலையாள நடிகரான பாலா, தமிழில் அன்பு, அப்பா அம்மா செல்லம், வீரம் உள்ளிட்ட படத்தில் நடித்துள்ளார். இவர் பாடகி அம்ருதாவை காதலித்து திருமணம் செய்தார். பின், கருத்துவேறுபாடு காரணமாக அவரை பிரித்தார். இதைத்தொடர்ந்து, டாக்டர் எலிசபெத் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார். ஆனால், அவருடன் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்த பாலா, மூன்றாவதாக உறவுக்கார பெண்ணான கோகிலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் எர்ணாகுளம் கலூர் பாவகுளம் கோவிலில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நடிகர் பாலாவின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications











