Bala:18 வயது வித்தியாசம்.. விரைவில் எனக்கு புள்ள பொறக்கும்.. என் மீது பலருக்கு பொறாமை.. பாலா பேட்டி!

சென்னை: இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரரான நடிகர் பாலா கடந்த வாரம் மூன்றாவதாக கோகிலா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த​ ​பாலா, பல முறை திருமணம் செய்து கொண்டதற்காக சிலர் என்னை கிண்டல் செய்கின்றனர். அவர்களுக்கு திருமணத்திற்கு பெண் கிடைக்காததால் என்னைப் பார்த்து பொறாமை படுகின்றனர்.என்று கூறியள்ளார்.

மலையாள நடிகரான பாலா, தமிழில் அன்பு, அப்பா அம்மா செல்லம், வீரம் உள்ளிட்ட படத்தில் நடித்துள்ளார். இவர் அம்ருதா சுரேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா என்கிற மகள் இருக்கும் நிலையில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதையடுத்து,
2021ம் ஆண்டு கேரளாவை சேர்ந்த டாக்டர் எலிசபெத் என்பவரை இரண்டாவதாக ரகசியமாக திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்த்துவந்தார். அதன்பின் இவர்களுக்குள் என்ன பிரச்சனை ஏற்பட்டது என்று தெரியவில்லை அவரையும் பிரிந்தார்.

bala marriage kokila marriage

மூன்றாவது திருமணம்: பாலாவின் முதல் மனைவி அம்ருதா அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட பாலா, ஜாமீனில் வெளியே வந்தார். வெளியே வந்த அவர், கோகிலா என்ற பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் எர்ணாகுளம் கலூர் பாவகுளம் கோவிலில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நடிகர் பாலாவின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். பாலா மூன்றாவதாக திருமணம் செய்து கொண்ட பெண் அவரின் உறவுக்கார பெண் கோகிலா. இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் இவருக்கு மலையாளம் தெரியாது.

bala marriage kokila marriage

விரைவில் குழந்தை பிறக்கும்: இந்நிலையில் மூன்றாம் திருமணம் குறித்து பேட்டி அளித்துள்ள பாலா, பல முறை திருமணம் செய்து கொண்டதாக பலரும் என்னை விமர்சனம் செய்து வருகின்றனர். திருமணத்திற்கு பெண் கிடைக்காதவர்கள் தான் என்னை பார்த்து பொறாமைப்படுகின்றனர். எனது மனைவி கோகிலாவிற்கு 24 வயதாகிறது. என் கோடிக்கணக்கான சொத்துக்கள் அனைத்தையும் நிர்வகிப்பது அவர் தான், அவருக்குத்தான் என் சொத்து. நான் ராஜா போல வாழ்வேன்,என் மனைவி ராணி போல வாழ்வார். மேலும், நாங்கள் விரைவில் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறோம்.விரைவில் எங்களுக்கு குழந்தை பிறக்கும். என்னுடன் இருக்கும் அனைவரும் எப்போதும் நலமாகவே இருப்பார்கள். இதைப் பார்த்து யாராவது பொறாமைப்பட்டால், அது அவர்களின் தவறு என்று நடிகர் பாலா அந்த பேட்டியில் கூறினார்.

bala marriage kokila marriage

இந்த பேட்டியைப் பார்த்த இணையவாசிகள் குறிப்பாக 90ஸ் இளைஞர்கள் அடப்பாவி, 18 வயது வித்தியாசத்தில் மூன்றாவது திருமணமா, எனக்கெல்லாம் ஒன்னும் ஒரு கல்யாணம் கூட நடக்கவில்லை என்று கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து பெருமூச்சு விட்டுவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X