மகாபாரத கேரக்டர்.. சினிமாவாகும் சகுந்தலையின் காதல்.. சமந்தா ஜோடியானார் இளம் நடிகர்!

By

ஐதராபாத்: சாகுந்தலம் படத்தில் நடிகை சமந்தா ஜோடியாக மலையாள நடிகர் ஒருவர் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

அனுஷ்கா நாயகியாக நடித்து வெளியான ருத்ரமாதேவி படத்தை இயக்கியவர், பிரபல தெலுங்கு இயக்குனர் குணசேகர்.

ராணா, அல்லு அர்ஜுன் உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படம் தமிழிலும் வெளியானது.

புராண காதல் கதை

புராண காதல் கதை

இந்தப் படத்துக்கு முன் மகேஷ்பாபு, பூமிகா நடித்த ஒக்கடு, மகேஷ்பாபு, த்ரிஷா நடித்த சைனிகுடு உட்பட சில படங்களை இயக்கி இருக்கிறார், குணசேகர். இவர் அடுத்து, சாகுந்தலம் என்ற புராண காதல் கதையை இயக்க இருப்பதாக அறிவித்திருந்தார். மகாபாரதத்தின் ஒரு கதாபாத்திரமான சகுந்தலையின் கதைதான் இது.

காந்தர்வ மணம்

காந்தர்வ மணம்

விசுவாமித்திர முனிவருக்கும் மேனகைக்கும் பிறந்தவள், சகுந்தலை. இவர், மன்னர் துஷ்யந்தனை காதலிக்கிறார். பின்னர் காந்தர்வ மணம் புரிந்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் அவரைப் பிரிகிறார் துஷ்யந்தன். முனிவர் சாபத்தால், துஷ்யந்தன் அவரை மறக்கும் நிலை ஏற்படுகிறது.

எப்படி இணைகிறார்

எப்படி இணைகிறார்

பல்வேறு துன்பங்களை கடந்து கணவருடன் சகுந்தலை எப்படி இணைகிறார் என்பது கதை. இந்தக் கதையை மையமாக வைத்து படம் உருவாகிறது. சகுந்தலையாக நடிக்க, பூஜா ஹெக்டேவிடம் இயக்குனர் குணசேகர் பேசியதாகவும், ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்க விருப்பமில்லை என்று அவர் கூறியதாகவும் தகவல்கள் வெளியாயின.

ஐந்து மொழிகளில்

ஐந்து மொழிகளில்

இந்நிலையில், இதில் நடிக்க சமந்தா ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இதை குணா டீம் ஒர்க்ஸ் என்ற நிறுவனம் சார்பில் நீலிமா குணா தயாரிக்கிறார். மணி சர்மா இசை அமைக்கிறார். பான் இந்தியா முறையில் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட ஐந்து மொழிகளில் உருவாகிறது.

புராண படங்கள்

புராண படங்கள்

ஏற்கனவே, சகுந்தலையின் காதலை மையமாக வைத்து சில புராண படங்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், இந்தப் படத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன், சமந்தா ஜோடியாக நடிக்க இருக்கிறார். அவர் துஷ்யந்தனாக நடிக்க இருக்கிறார். இந்த கேரக்டரில் நடிக்க வைக்க சில டாப் தெலுங்கு ஹீரோக்களிடம் இயக்குனர் குணசேகர் பேசி வந்தார்.

சூஃபியும் சுஜாதாயும்

சூஃபியும் சுஜாதாயும்

கால்ஷீட் பிரச்சனை காரணமாக, அவர்களால் நடிக்க முடியாமல் போனதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தேவ் மோகனை ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. பிரபல மாடலும் நடிகருமான தேவ் மோகன், மலையாளத்தில்
வெளியான சூஃபியும் சுஜாதாயும் என்ற படத்தில் நடித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X