விஜய் போல CM ஆகணும்..த்ரிஷா மாதிரி நவ்யாவும் முன்வரிசையில அழணும்..தமிழ்நாட்டு மானத்தை வாங்கிய நடிகர்

சென்னை: தமிழ் சினிமாவில் எப்படி மிஸ்கின், அமீர், பேரரசு போன்ற இயக்குநர்கள் பட வெளியீட்டு விழா, இசைவெளியீட்டுவிழாவில் கலகலப்பாக பேசி சர்ச்சையை கிளப்புவார்களோ அதோ போல, மலையாள சினிமாவில் சுவாரசியத்திற்கு பஞ்சமே இல்லாமல் பேசுபவர் தான் மலையாள நடிகர் தியான் ஸ்ரீனிவாசன், தற்போது இவர் தமிழக முதலமைச்சர் விஜய் பற்றியும் த்ரிஷா பற்றியும் பேசி மேடையை அதிர வைத்துவிட்டார்.

நான் கேரளா CM ஆவேன்: விழா மேடையில் பேசிய தியான் ஸ்ரீனிவாசன், நான் அண்மையில் ஆஸ்திரேலியாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்று இருந்தேன். அப்போது தான் நடிகர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அவர் முதலமைச்சரானதும் எனக்கும் அடுத்த 15 ஆண்டுகளுக்கு எப்படியாவது முதலமைச்சராகவிட வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது. அதை உடனே என் நண்பர் அஜு வர்கீஸிடம் சொன்னோம். அவர், நீ முதலமைச்சர் ஆவதற்கு முன் மலையாள நடிகர் சங்கமான 'அம்மா' அமைப்பின் தலைவராக வேண்டும், அதன் பிறகு நிறைய மக்களுக்கு பல தொண்டுகள் செய்து, மக்களைக் கவர்ந்து முதலமைச்சராகலாம் என்றார். அதன் பின், அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் எனக்கு ஃபோன் செய்து, மச்சான், இப்போ அம்மா' சங்கத்துல பெரிய பிரச்சனைகள் ஓடிக்கிட்டு இருக்கு, அங்கேயும் போகாத, CM பதவிக்கும் ஆசைப்படாத. உனக்கு எதுவுமே வேலை இல்லாத 'கவர்னர்' பதவிதான் கரெக்ட்டா இருக்கும் என்று சொன்னார். தியான் ஸ்ரீவான் பேச்சை கேட்டு அரங்மே கைத்தட்டி சிரித்தது.

Malayalam Actor Dhyan Sreenivasan speech

முன் வரிசையில் சீட்: தொடர்ந்து பேசிய தியான், விசிட்டர் படத்தின் நாயகி நவ்யா நாயரும் நானும் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த படத்தில் இணைந்து இருக்கிறோம். நவ்யாவுக்கு இப்போது திருமணமாகி ஒரு மகனும் இருக்கிறான். இருந்தாலும், நான் கேரளா முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் எடுக்கும்போது, நவ்யா நாயர் புடவை கட்டிக்கொண்டு, கண்களில் கண்ணீருடன் முன் வரிசையில் அமர்ந்திருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்று விஜய்யின் பதவியேற்பு விழாவில் த்ரிஷா அமர்ந்திருந்ததை மறைமுகமாக சுட்டிக்காட்டி கிண்டலடித்து பேசினார். இதைத்தொடர்ந்து பேசிய நடிகை நவ்யா நாயர், தியான் சார், நீ கவலைப்படாதீங்க, நீ முதலமைச்சராகும்போது, உங்க ஆசைப்படியே நான் பச்சை பார்டர் வைத்த வெள்ளை நிறப் புடவை மற்றும் வைர நெக்லஸ் அணிந்து, முன் வரிசையில் கண்களில் கண்ணீருடன் அமர்ந்து கொண்டு வாழ்ங்க வாழ்க் என கோஷம் போடுவேன். எனக்காக முன் வரிசையில் ஒரு சீட் அரேஞ்ச் பண்ணிடுவ இல்ல? என்று அரங்கை அதிர வைத்தார்.

Malayalam Actor Dhyan Sreenivasan speech

விஜய் மன்னிச்சிடுங்க: இவர்கள் இருவரின் பேச்சை கேட்டு மிரண்டு போன, நடிகர் அஜு வர்கீஸ், தியானும், நவ்யாவும் பேசியதை பார்க்கும் போது எனக்கு ஒரு விஷயம் மட்டும் தெளிவாகத் தெரிகிறது. என்னால் இனிமேல் தமிழ்நாட்டிற்குள் காலடி எடுத்து வைக்கவே முடியாது. அதனால், என் அன்பிற்குரிய CM விஜய் சார்... என் 'நண்பனுக்கு' பைத்தியம் பிடித்துவிட்டது, என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள் என்று காமெடியாக பேசினார். கேரளாவில் விஜய் மற்றும் திரிஷா குறித்து பட விழாவில் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X