நீண்ட நாள் காதலியை கோவிலில் எளிமையாக திருமணம் முடித்த பிரபல நடிகர்.. திடீரென வைரலாகும் போட்டோஸ்!
சென்னை: பிரபல மலையாள நடிகரான கோகுலன் இன்று தனது நீண்ட நாள் காதலியான தன்யாவை கோவிலில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார்.
Recommended Video
கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்டுள்ள லாக்டவுன் காரணமாக அரசியல்வாதிகள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த சில பிரபலங்கள் பலரும் தங்களின் திருமணத்தை தள்ளி வைத்து வருகின்றனர்.
அதே நேரத்தில் சாமானிய மக்கள் மட்டுமின்றி பிரபலங்கள் சிலரும் கோவில் மற்றும் வீடுகளில் மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொள்கின்றனர்.

நடிகர் கோகுலன்
அந்த வகையில் பிரபல மலையாள நடிகரான கோகுலன் இன்று தனது நீண்ட நாள் காதலியான தன்யாவை திருமணம் செய்து கொண்டனர். நடிகர் கோகுலன் வாரிக்குழியிலே கொலப்பதக்கம், உண்டா, புண்யலன் அகர்பத்திஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

கோவிலில் திருமணம்
மம்மூட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடனும் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தனது சொந்த ஊரான எர்ணாகுளத்தில் உள்ள கோவிலில் தனது நீண்ட நாள் காதலியான தன்யாவை கோகுலன் இன்று குடும்பத்தினர் முன்னிலையில் இன்று எளிமையாக திருமணம் செய்து கொண்டார்.

மேட்சாக மாஸ்க்
நடிகர் கோகுலன் வெள்ளை வேட்டி சட்டையிலும் தன்யா சிவப்பு நிற பட்டுப்புடவை என பாரம்பரிய உடையிலும் இருந்தனர். அவர்கள் இருவரும் அவர்களின் டிரெஸ்க்கு மேட்சாக மாஸ்க் அணிந்திருந்தனர். திடீரென அவர்களின் திருமண போட்டோ வெளியானதால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

பிரபலங்கள் வாழ்த்து
கோகுலனின் திருமண செய்தியை அறிந்த மலையாள திரை பிரபலங்களான ஜெயசூர்யா, ஜோஜு ஜார்ஜ், கின்னஸ் பக்ரூ உள்ளிட்ட பலரும் புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் ஜெயசூர்யா புண்யலான் அகல்பத்திஸ் படத்தில் கோகுலன் உடன் இணைந்து நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











