சாலை விபத்தில் பிரபல மலையாள நடிகர் ஜெகதி ஸ்ரீகுமார் படுகாயம்!

By Shankar

Jagathy Sreekumar
கொச்சி: பிரபல மலையாள நடிகர் ஜெகதி ஸ்ரீகுமார் இன்று காலை விபத்தில் சிக்கினார். அவர் தலையில் பலத்த காயமேற்பட்டுள்ளது.

மலையாளத்தில் 1100 படங்களுக்கும் மேல் நடித்தவர் ஜெகதி. இங்கே கவுண்டமணி மாதிரி மலையாளத்தில் ஜெகதி.

அவருக்கு நேர்ந்த விபத்து குறித்து போலீஸார் கூறுகையில், "மலப்புரம் மாவட்டம் பனம்ப்ரா அருகே தேனிப்பாலம் என்ற இடத்தில் ஜெகதி ஸ்ரீகுமாரின் கார் வந்த போது, சாலையின் தடுப்புச் சுவரில் மோதி நொறுங்கியது. இதில் ஜெகதியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரது விலாவிலும் பலத்த காயம். நுரையீரல் பகுதியில் ஆழமான வெட்டு ஏற்பட்டுள்ளது.

அவரது டிரைவருக்கும் பலத்த காயம். இருவரும் கோழிக்கோட்டில் உள்ள மலபார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தனி மருத்துவர் குழு அவர்களைக் கவனித்து வருகிறது. பலத்த காயம் என்றாலும், ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்," என்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X