Sivakarthikeyan: SK21 படத்தில் இணைந்த பிரபல மலையாள ஆக்டர்.. இவரும் வில்லன்தானாம்!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்கள் அவருக்கு வெற்றி படங்களாக அமைந்து வருகின்றன. கடந்த ஆண்டில் வெளியான மாவீரன் படமும் இந்த ஆண்டில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த மாதத்தில் வெளியான அயலான் படமும் அவருக்கு அடுத்தடுத்து வெற்றி படங்களாக அமைந்துள்ளன. இந்த இரு படங்களும் வசூலில் 100 கோடியை நெருங்கியுள்ளன. இந்நிலையில் தற்போது அவர் கமல்ஹாசன் தயாரிப்பில் எஸ்கே 21 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வரும் சூழலில் படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்து வருகிறார். முன்னதாக இந்த படத்திற்காக தன்னுடைய ஹேர் ஸ்டைலை கூட வெளிப்படுத்தாமல் நடித்திருந்தார் சிவகார்த்திகேயன். நாளைய தினம் அவர் தனது பிறந்தநாளை கொண்டாடவுள்ள சூழலில் இன்று மாலை இந்த படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியாக உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு அடுத்ததாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே23 படத்தில் இணையவுள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தின் பூஜையும் எளிமையான அளவில் போடப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன் ஆங்கராக தன்னுடைய பயணத்தை துவங்கியவர். தொடர்ந்து சினிமாவில் 3 படத்தில் காமெடியனாக நடித்திருந்தார். மெரினா உள்ளிட்ட படங்கள் அவருக்கு ஹீரோ அந்தஸ்தை கொடுத்தன. தொடர்ந்து காமெடி மற்றும் கலகலப்பு நிறைந்ததாக தன்னுடைய கேரக்டர்களை அவர் வடிவமைத்து வந்தார். அந்த வகையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்கள் அவருக்கு சிறப்பாக கை கொடுத்தன. இந்த படங்களை தொடர்ந்து தன்னுடைய டிராக்கை மாற்றினார் சிவகார்த்திகேயன். கொஞ்சம் சீரியசான கேரக்டர்களில் அவர் நடிக்க துவங்கினார்.
தயாரிப்பாளராகவும் மாஸ்: காமெடி, ஆக்சன், சென்டிமென்ட் கலந்த படங்களை தொடர்ந்து கொடுத்து ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நாயகனாக மாறியுள்ளார் சிவகார்த்திகேயன். தயாரிப்பாளராகவும் தன்னை கோலிவுட்டில் சிறப்பாக நிலைநிறுத்தியுள்ள சிவகார்த்திகேயன், டாக்டர் மற்றும் டான் படங்களை தயாரித்து அதன் மூலம் தன்னுடைய வெற்றிப் பயணத்தை தொடர்ந்து வருகிறார். இந்தப்படங்கள் அவருக்கு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் சிறப்பாக கை கொடுத்தன. இரு படங்களுமே 100 கோடி கிளப்பில் இணைந்து மாஸ் காட்டின. இந்த படங்களை தொடர்ந்து வெளியான பிரின்ஸ் படம் அவருக்கு சொதப்பலாக அமைந்தது.
எஸ்கே 21 படம்: ஆனாலும் சுதாரித்துக் கொண்ட சிவகார்த்திகேயன், கடந்த ஆண்டில் வெளியான மாவீரன் மற்றும் இந்த ஆண்டு துவக்கத்திலேயே பொங்கலை ஒட்டி வெளியான அயலான் படங்களை வெற்றி படங்களாக கொடுத்திருந்தார். இந்த படங்களை தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் எஸ்கே 21 படத்தில் நடித்து வருகிறார். விரைவில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நிறைவடையவுள்ள நிலையில் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். அவரது இயக்கத்தில் இந்த படத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்த படத்தின் டைட்டில் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் நாளைய தினம் சிவகார்த்திகேயன் பிறந்தநாளையொட்டி இன்று மாலை படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியாக உள்ளதாக இரு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்கே 21 படத்தில் மலையாள நடிகர்: இந்நிலையில் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் ஷ்யாம் மோகன் இணைந்துள்ளார். அவர் படத்தில் சாய் பல்லவியின் சகோதரராக நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு மெயின் வில்லன் கேரக்டர் இல்லை என்ற போதிலும் அவரது கேரக்டர் படத்தில் முக்கியமானதாக அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் சூட்டிங் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதத்தில் நிறைவடைய உள்ளதாக உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது படத்தில் புதிய கேரக்டர் இணைக்கப்பட்டுள்ளது ரசிகர்களை மேலும் எதிர் பார்க்க வைத்துள்ளது. இந்நிலையில் இன்று மாலை வெளியாகவுள்ள படத்தின் டைட்டில் குறித்து பல்வேறு யூகங்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பரவி வருகின்றன.


Click it and Unblock the Notifications











