twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அனுமதியின்றி கார் பந்தயம் நடத்தியதாக பிரபல நடிகர் மீது வழக்கு...ரசிகர்கள் கோவம்

    |

    சென்னை : தனுஷ் நடிச்ச 'ஜகமே தந்திரம்' படத்தில் நடித்தவர், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ். இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார்.

    சமீபத்தில் தமிழில் வெளியாகியுள்ள 'விசித்திரன்' படத்தின் ஒரிஜினலான 'ஜோசப்' படத்தில் நடித்தவர் இவர்தான்.

    நேஷனல் அவார்ட் உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள இவர், சில படங்களை தயாரிச்சும் இருக்கார்.

    விரைவில் அமெரிக்கா பறக்கும் ரஜினி...தலைவர் 169 க்கு தயாராகிறாரா? விரைவில் அமெரிக்கா பறக்கும் ரஜினி...தலைவர் 169 க்கு தயாராகிறாரா?

    எதுக்கு இந்த வேலை

    எதுக்கு இந்த வேலை

    இவர் கேரள மாநிலம் வாகமணில் உள்ள எஸ்டேட் ஒன்றில், தனது விலையுயர்ந்த ஜீப்பில், கார் பந்தயத்தில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி பல சர்ச்சையான விமர்சனங்களை பெற்று வருகிறது .எதுக்கு இந்த வேலை என்று ரசிகர்கள் கோவமாக பல கேள்விகள் கேட்டு வருகின்றனர் .

    அனுமதி இன்றி பந்தயம்

    அனுமதி இன்றி பந்தயம்

    அதை அடுத்து விவசாயம் செய்ய மட்டுமே அனுமதிக்கப்பட்ட பகுதியில், அனுமதி இன்றி பந்தயத்தில் ஈடுபட்டதாகக் கூறி, நடிகர் ஜோஜு ஜார்ஜ் மீது கேரள மாணவர் சங்கம் போலீஸில் புகார் அளித்தது. இதையடுத்து இடுக்கி மாவட்ட ஆர்.டி.ஓ உள்ளிட்ட அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செஞ்சிருப்பதாக பல தகவல்கள் வருகிறது .

    பைக் ரேசிங் ,கார் ரேசிங்

    பைக் ரேசிங் ,கார் ரேசிங்

    பொதுவாகவே திரைப்பட நடிகர்கள் பலரும் தங்களுக்குப் பிடித்த பொழுதுபோக்கு விளையாட்டு ஒன்றை நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அதில் மும்முரமாக ஈடுபட்டு தங்களது ஜாலியான அனுபவங்களை சேகரித்துக் கொள்வார்கள். சூட்டிங் இல்லாத நாட்களில் நடிகர்கள் வெளிநாடு பயணம் செய்து வருவதும் பைக் ரேசிங் ,கார் ரேசிங், போன்ற விஷயங்களில் பங்கு கொள்வதும் புதிதல்ல .இருப்பினும் மற்றவர்களைப் பாதிக்காத வகையில் தாங்கள் ஈடுபடும் பொழுது போக்கு அம்சங்கள் ரசிக்கும்படியாக அமைந்துவிட்டால் ரசிகர்கள் இவர்கள் மீது கொண்ட மரியாதை என்றும் கூடிக் கொண்டேதான் இருக்கும்.

    சூப்பர் ஹீரோக்களாக பார்க்காமல்

    சூப்பர் ஹீரோக்களாக பார்க்காமல்

    அதற்கு மாறாக இவர்களது பொழுதுபோக்கு மற்றவர்களுக்கு பழுதுபார்க்கும் நிலை ஏற்படும் அளவுக்கு சில சூழ்நிலைகளில் உருவாக்குவது , பல சர்ச்சைகளும் விவாதங்களும் எழுவது ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.நடிகர்களை சூப்பர் ஹீரோக்களாக பார்க்காமல் சராசரி மனிதர்களாக பார்க்கும் நோக்கம் கேரள மக்களிடம் அதிகம் உள்ளது. அப்படி இருக்கும் சூழலில் யார் என்ன தவறு செய்தாலும் அவர்களை தட்டிக் கேட்டு நியாயங்களை உரக்கச் சொல்லி மக்களிடம் மன்னிப்பு கேட்கும் வரை விடாமல் துரத்திய பல சம்பவங்களும் உதாரணங்களும் கேரளாவில் ஏராளம். இப்படி இருக்க இந்த பிரச்சனை என்ன முடிவுக்கு வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    English summary
    Malayalam actor Joju George booked for off-road race in Idukki
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X