Leo Movie :அடுத்தடுத்த நட்சத்திரங்களை களமிறக்கும் லோகேஷ்.. லியோ படத்தில் இணைந்த மற்றொரு பிரபலம்!
சென்னை : நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வருகிறது லியோ படம். இந்தப் படத்தில் இரண்டாவது முறையாக விஜய் மற்றும் லோகேஷ் இணைந்துள்ளனர்.
இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து 50 நாட்கள் காஷ்மீரில் கடுமையான குளிருக்கிடையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தற்போது சென்னையில் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. படம் முன்னதாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு சூட்டிங் துவங்கப்பட்டுள்ளது.

லியோ படத்தில் ஜோஜு ஜார்ஜ் : நடிகர்கள் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜுன், பிரியா ஆனந்த் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வருகிறது லியோ. மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் மீண்டும் இணைந்துள்ள படம் லியோ. இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியாகியது. தொடர்ந்து 50 நாட்கள் காஷ்மீரில் கடுமையான குளிருக்கிடையில் சூட்டிங் நடத்தப்பட்டது. இதன் வீடியோக்களும் பகிரப்பட்டன.
இந்நிலையில் சென்னையில் படத்தின் சூட்டிங் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு, போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகளை துவங்க இயக்குநர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளார். சென்னையில் நடைபெறும் சூட்டிங்கில் சஞ்சய் தத்தும் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக காஷ்மீரில் நடைபெற்ற சூட்டிங்கிலும் அவரது காட்சிகள் படமாக்கப்பட்டன.
அவருக்கு முன்னதாக மிஷ்கின், கௌதம் மேனன் என அடுத்தடுத்த நடிகர்களின் சூட்டிங்கை சிறப்பாக திட்டமிட்டு நடத்தி முடித்திருந்தார் லோகேஷ் கனகராஜ். இதையடுத்து காஷ்மீர் சூட்டிங்கை நிறைவு செய்துக் கொண்டு படக்குழு சென்னை திரும்பியது. இதையடுத்து காஷ்மீரில் படக்குழுவினர் எவ்வளவு கஷ்டங்களுக்கு இடையில் படத்தின் சூட்டிங்கை நடத்தி முடித்தது என்பது குறித்த வீடியோ பகிரப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அக்டோபர் 19ம் தேதி படம் ரிலீசாகவுள்ளதாக முன்னதாகவே அறிவிப்பு செய்துவிட்டே, சூட்டிங்கை துவக்கினார் லோகேஷ் கனகராஜ். இதையடுத்து படத்தின்மீது ரசிகர்களுக்கு மிகவும் அதிகமான எதிர்பார்ப்பு குவிந்துள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெறும் சூட்டிங்கில் விஜய்யுடன் இவர் பங்கேற்பார் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக படத்தில் மலையாள நடிகர்கள் மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி ஆகியோர் இடம்பெற்றுள்ள நிலையில், தற்போது ஜோஜு ஜார்ஜ் மூன்றாவதாக இடம்பெற்றுள்ளார். விக்ரம் படத்திலும் இதேபோல அதிகமான கேரக்டர்களை கொண்டு படத்தை இயக்கியிருந்தார் லோகேஷ் கனகராஜ். அவர்கள் அனைவருக்கும் சமமான கேரக்டர் அந்தப் படத்தில் அமைந்தது. அதேபோல தற்போது லியோ படத்திலும் அதிகமான நடிகர்கள் இணைந்துள்ளனர். இவர்களுக்கு படத்தில் எத்தகைய கேரக்டர்கள் அமையும் என்பதை அறிய ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காணப்படுகின்றனர்.


Click it and Unblock the Notifications











