ஓட்டல் அறையில் இறந்து கிடந்த மலையாள நடிகர்.. என்ன நடந்தது?
சென்னை: மலையாள நடிகரும் மிமிக்ரி கலைஞருமான கலாபவன் நவாஸ் நேற்று சோட்டாணிக்கராவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 51. அவர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
நடிகர் கலாபவன் நவாஸ் 'பிரகாம்பனம்' என்ற மலையாள படத்தின் படப்பிடிப்பு எர்ணாகுளத்தில் நடித்துள்ளது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக கலாபவன் நவாஸ் அவர் சோட்டாணிக்கராவில் உள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளார். ஆனால், நேற்று படப்பிடிப்பு முடித்ததால், நவாஸ் அறையை காலி செய்ய திட்டமிட்டிருந்தார். இதற்கான கலாபவன் நவாஸ், ஹோட்டல் ஊழியரிடம் பேருந்து மற்றும் ரயில் நேரம் குறித்து விசாரித்து உள்ளார். இதுகுறித்து, நவாஸில் தெரிவிப்பதற்கான அந்த ஊழியர் சென்ற போது,
நடிகர் தனது அறையில் மயக்கமடைந்து சுயநினைவு இல்லாமல் இருந்துள்ளார்.

திடீர் மரணம்: இதைத்தொடர்ந்து, ஓட்டல் ஊழியர்கள் அவர் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட ஓட்டலில் போலீசார் ஆய்வு செய்து, சிசிடிவி ஆதாரங்களை ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய சோட்டாணிக்கரா காவல் நிலைய அதிகாரி, அவர் தங்கி இருந்த ஓட்டல் அறையில் சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. கலாபவன் நவாஸ் உயிரிழந்தது குறித்து அவரது உறவினர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சோட்டாணிக்கராவில் உள்ள எஸ்டி டாடா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு இன்று பிரேத பரிசோத செய்யப்பட்டு பிறகு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்றார். கலாபவன் நவாஸ் மறைவுக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திறமையான நடிகர்: மலையாள சினிமாவில் மிமிக்ரி கலைஞரான கலாபவன் நவாஸ், பின்னணிப் பாடகர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் 1995 ஆம் ஆண்டு சைதன்யம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர். மிமிக்ஸ் ஆக்ஷன் 500, ஹிட்லர் பிரதர்ஸ், ஜூனியர் மாண்ட்ரேக், மாட்டுப்பெட்டி மச்சான், அம்மா அம்மாய்யம்மா, சந்தமாமா மற்றும் தில்லானா தில்லானா உள்ளிட்ட பல திரைப்படங்களிலும், கலாபவன் சக்கர முத்து , சட்டம்பிநாடு, சீனியர் மாண்ட்ரேக் மற்றும் வலியங்கடி, வீரபுத்திரன் , தல்சமயம் ஒரு பெண்குட்டி , ஏபிசிடி: அமெரிக்கன்-பார்ன் கன்ஃப்யூஸ்ட் தேசி என ஏராளமான படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல், காமெடி மாஸ்டர்ஸ், காமெடி ஸ்டார்ஸ் சீசன் 2, தக்கார்ப்பன் காமெடி போன்ற ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











