காதலித்த காலத்தில் அஜித் - ஷாலினி பயன்படுத்திய கோட் வோர்டு.. பிரபல நடிகரால் அம்பலமான ரகசியம்!
சென்னை: காதலித்த நாட்களில் அஜித்தும் ஷாலினியும் பேச பயன்படுத்தப் பட்ட ரகசிய வார்த்தை குறித்த சுவாரசிய தகவலை பிரபல நடிகர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.
நடிகை ஷாலினி குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார் ஷாலினி.
பின்னர் வளர்ந்ததும் அஜித், விஜய், மாதவன், பிரசாந்த் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். நடிகர் அஜித்தை திருமணம் செய்த பிறகு படங்களில் நடிக்காமல் சினிமாவில் இருந்து ஒதுங்கி விட்டார் ஷாலினி.

ரகசிய வார்த்தை
அமர்க்களம் படத்தில் இணைந்து நடித்த போதுதான் அஜித்துக்கும் ஷாலினிக்கும் இடையே காதல் மலர்ந்தது. அப்போது ஷாலினி தமிழ் மட்டுமின்றி மலையாள படங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். மோலிவுட் படங்களில் ஷாலினி நடிக்கும் போது அஜித்தும் ஷாலினியும் பேச எந்த வார்த்தை உதவியது என்பது குறித்த சுவாரசிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ரகசிய காதல்
மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன், மற்றவர்களின் சந்தேகத்தைத் தவிர்ப்பதற்காக அஜித் தன்னுடைய போனுக்குதான் அழைப்பார் என கூறியுள்ளார். அப்போது மலையாளத்தில் நிறம் திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்த ஷாலினி தனது காதலை ரகசியமாக வைத்திருந்தார், குஞ்சாகோவுக்கு மட்டுமே அவர்களின் காதல் விவகாரம் தெரிந்திருந்தது.

தெரிய வேண்டாம்
ஷாலினியுடன் நேரடியாக ஷூட்டிங் செட்டில் பேசுவது ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு போன் செய்வதை நடிகர் அஜித் தவிர்த்தார், ஏனெனில் அவர்கள் இருவரும் பேசுவது ஷாலினி பெற்றோரின் கவனத்திற்கு வருவதை அவர் விரும்பவில்லை. அந்த காலத்தில், மொபைல் போன்கள் அந்தளவுக்கு பிரபலமாக இல்லை.

ஷாலினியுடன் பேச்சு
குஞ்சாக்கோ தனது எரிக்சன் மொபைலை ஷூட்டிங் செட்டுக்கு எடுத்துச் செல்வது வழக்கமாம். இதனால் படப்பிடிப்பும் இடைவேளையின் போது அஜித்தும் ஷாலினியும் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வதற்கும் அவரது போனைதான் பயன்படுத்தியுள்ளனர். அஜித் குஞ்சாக்கோவின் போனுக்கு அழைத்துதான் ஷாலினியிடம் பேசுவாராம்.

ஏகே 47 காலிங்
ஷாலினி பெற்றோரின் கவனத்தைத் தவிர்ப்பதற்காக, அஜித்தின் அழைப்பு வரும்போதெல்லாம், குஞ்சாக்கோ சோனா, ஏ.கே .47 காலிங் என்று சொல்வாராம். இந்த படத்தில் ஷாலினியின் கதாபாத்திரத்தின் பெயர் சோனா என்பதால் அப்படி அழைப்பாராம். மேலும் இந்த குறியீட்டு வார்த்தை ஷாலினி படப்பிடிப்பு இடத்திலிருந்து விலகி அஜித்துடன் பேச உதவியதாகவும் கூறியிருக்கிறார்.

இயக்குநருக்கு டவுட்
குஞ்சாக்கோவும் ஷாலினியும் படத்திற்காக ஒரு மாத காலம் ஷூட்டிங்கில் இருந்தனர். கல்லூரி காட்சிகளை பதிவு செய்தனர், சிறிது நாட்களுக்குப் பிறகு, படத்தின் இயக்குனர் கமலுக்கு, ஏ.கே .47 குறியீடு வார்த்தையின் மீது சந்தேகம் வந்ததாம். இதனைத் தொடர்ந்து அவர் குஞ்சாக்கோவிடம் இது குறித்து கேட்டுள்ளார்.

வெட்கத்தில் சிவந்த ஷாலினி
அப்போது அவர் இயக்குநர் கமலுக்கு அந்த ரகசியத்தை கூறியிருக்கிறார். மறுநாள், ஒரு படப்பிடிப்பு இடைவேளையின் போது, இயக்குனர் ஷாலினியிடம் ஏ.கே .47 ஏன் அந்த நாளில் போன் செய்யவில்லை என்று கேட்டுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத ஷாலினியின் முகம் வெட்கத்தில் சிவந்து போனதாம். இந்த தகவல்களை மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











