கர்ணன் படத்தில் நடிப்பால் உச்சத்தைத் தொட்ட பிரபல மலையாள நடிகர்!

சென்னை : கர்ணன் திரைப்படம் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக வசூல் வேட்டை நடத்திக் கொண்டுள்ளது.

கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தை மாரிசெல்வராஜ் இயக்கி இருக்க தனுஷ் ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் அனைத்து கதாபாத்திரங்களும் மிகச் சிறப்பாக அமையப் பெற்றிருக்க பிரபல மலையாள நடிகர் லால்லின் நடிப்பை ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர்.

முதல்நாளே வசூல்

முதல்நாளே வசூல்

கொரானா கட்டுப்பாடுகளுக்கு நடுவிலும் கர்ணன் திரைப்படம் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் பாசிட்டிவான விமர்சனங்களுடன் வெற்றி நடைபோட்டுக் கொண்டுள்ளது. முதல்நாளே கிட்டதட்ட 10 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

முக்கியமான வேடங்களில்

முக்கியமான வேடங்களில்

பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் கர்ணன் திரைப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருக்க ஹீரோயினியாக மலையாள நடிகை ராஜிஷா நடித்திருக்கிறார். யோகிபாபு கௌரி கிஷன், நட்டி மற்றும் லால் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர்.

காமெடி செய்யும் நல்ல வில்லனாக

காமெடி செய்யும் நல்ல வில்லனாக

நடிகர் லால் மலையாளத்தில் மிகச் சிறந்த நடிகராகவும் இயக்குனராகவும் இருந்துவரும் நிலையில் தமிழில் ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சண்டைக்கோழி இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்று தந்தது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான சுல்தான் திரைப்படத்தில் அனைவரும் ரசிக்கின்ற வகையில் காமெடி செய்யும் நல்ல வில்லனாக வந்து அனைவரையும் கவர்ந்து இருந்தார்

Recommended Video

தமிழில் நிறைய படம் பண்ணனும் |Actress Rajisha Vijayan Talk Part-2| Filmibeat Tamil
பல விருதுகளை வெல்வார்

பல விருதுகளை வெல்வார்

சுல்தானைத் தொடர்ந்து தற்போது வெளியாகியிருக்கும் கர்ணன் படத்திலும் முக்கியமான வேடத்தில் அனைவரும் அசந்து போகும் நடிப்பை வெளிப்படுத்தியுள்ள லால் தமிழ் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். மேலும் இதில் சொல்லிவைத்தாற்போல் சுல்தான் திரைப்படத்திலும் இவரது கதாபாத்திரம் இறந்து விடும் அதேபோல கர்ணன் திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் இறந்து விடுமாறு அமைந்துள்ளது. தமிழ் ரசிகர்களின் இந்த பேராதரவை பார்த்த லால் உச்சி குளிர்ந்துள்ளார். மேலும் நடிகர் லால் நல்ல கதைகளில் நடித்து தமிழ் சினிமாவில் பல விருதுகளை வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X