மெகாஸ்டார் மம்மூட்டிக்கு புற்று நோயா?.. அவருக்கு என்ன ஆச்சு.. படப்பிடிப்பில் நடந்தது என்ன?

கேரளா: வருடத்திற்கு 5 படங்களில் நடிக்கும் மம்மூட்டி திடீரென நடிப்பில் இருந்து பிரேக் எடுத்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வலைதளங்களில் செய்திகள் தீயாய் பரவியது. இந்த சூழலில் அவரது உடல்நிலை குறித்து படக்குழு விளக்கம் அளித்துள்ளது.

தளபதி, மெளனம் சம்மதம், கார்மேகம், மறுமலர்ச்சி போன்ற தமிழ் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் மெகா ஸ்டார் மம்மூட்டி. மலையாளத்தில் 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.தற்போது இளம் நடிகர்களுக்கு போட்டியாக வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இளம் இயக்குநர்கள் நான் நீ என்று போட்டி போட்டு மம்மூட்டியிடம் கதை சொல்ல க்யூவில் காத்திருக்கின்றனர். அவர் தேர்ந்தெடுக்கும் படங்கள் இளம் நடிகர்களுக்கே சவாலான கதாப்பாத்திரமாக இருக்கிறது.

தக்லைஃப்: பேரன்பு படத்தில் நடித்தபோது தமிழ் யூடியூப் சேனல்களில் மம்மூட்டி அளித்த பேட்டிகள் பெரிய அளவில் டிரெண்டிங் ஆனது. மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மானே வியந்து பார்க்கும் அளவிற்கு தொகுப்பாளர்களை அசர வைத்தார் மம்மூட்டி. தேவையில்லாத கேள்விகளுக்கு பதிலை இப்படித்தான் தருவது போன்ற ஒரு லுக்கே வைத்து தெரிந்துகொள்ளலாம். பார்த்தால் பகை நெருங்கி பழகினால் அவர் ஒரு குழந்தை என்று பிற நடிகர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் நடிகர்கள் நடித்த படங்களை நான் பார்க்கிறேன். என் படங்களை அவர்கள் பார்க்கிறார்களா, நீங்க பாத்தீங்களா என எதிர் கேள்விகளாலும் அசர வைப்பது அவரது தனி ஸ்டைல். அம்பேத்கர் படத்தில் நடித்த போது ஒருவர் தனது காலில் விழுந்த அனுபவத்தை பகிர்ந்து அதை தான் விருதாக பார்க்கிறேன் என்றார்.

malayalam-actor-mammooty-diagnosed-cancer-rumor-and-updated-for-pro

புற்று நோய் பாதிப்பா?: மம்மூட்டி நடித்திருக்கும் பசூக்கா திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இதனை தாண்டி தனது அடுத்தடுத்த படங்களையும் கமிட் செய்து வைத்திருக்கிறார். இந்நிலையில் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அதனால் தன்னுடைய கமிட்மென்ட்களிலிருந்து விலகி ஓய்வெடுத்து வருவதாகவும் சமூக வலைதளப் பக்கங்களில் தீயாக பரவியது. இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து மம்மூட்டியின் பிஆர்ஓ தற்போது அறிக்கை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.

பொய்யான தகவல்: இது பொய்யான தகவல் ரமலான் பண்டிகைக்காக நோன்பு இருப்பதால் மம்மூட்டி விடுப்பு எடுத்திருக்கிறார். இதனால் தான் அவர் படப்பிடிப்புகளிலிருந்து ஒரு இடைவெளியும் எடுத்திருக்கிறார். இந்த இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் நடிக்க தொடங்கிவிடுவார் எனக் கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் மோகன் லால் -மம்மூட்டி லெஜண்ட் நடிகர்கள் நடிக்கின்றனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் இணைந்து நடிப்பதால் மலையாள திரை ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சமீபத்தில், இப்படத்தின் பூஜை தொடங்கி இலங்கையில் படப்பிடிப்பு தொடங்கியது. 15 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கின்றனர். மம்மூட்டி, மோகன்லால் உடன் குஞ்சாக்கோ போபன், பஹத் பாசில், நயன்தாரா என ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். முன்னதாக கடல் கடனு ஒரு மாத்துக்குட்டி என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X