‘லியோ‘ லோகேஷ் சினிமாட்டிக் யுனிவெர்ஸூக்குள் வருமா?.. மேத்யூ தாமஸ் சொன்ன நச் பதில் !

சென்னை : லியோ படத்தில் இணைந்துள்ள மேத்யூ தாமஸ், படம் குறித்து பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்

ஒட்டுமொத்த சினிமாவின் பார்வையும் லியோ படத்தின் பக்கம் திரும்பி உள்ளதால், ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் மக்கள் அதை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர்.

லியோ படத்தின் மொத்த அறிவிப்பையும் அடுத்தடுத்து வெளியிட்ட படக்குழு தற்போது காஷ்மீரில் நிம்மதியாக படப்பிடிப்பை நடத்தி வருகிறது.

தளபதியின் லியோ

தளபதியின் லியோ

மாநகரம், கைதி, மாஸ்டர் , விக்ரம் என நான்கு வெற்றிப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய், திரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், ஆக்ஷன் கிங் அர்ஜூன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், பிக் பாஸ் ஜனனி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

அதிரடி உத்தரவு

அதிரடி உத்தரவு

லியோ திரைப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 19ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், காஷ்மீரில் லியோ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த வாரம் லியோ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ லீக்கானதால், படப்பிடிப்பு தளத்தில் யாரும் செல்போன் பயன்படுத்தக்கூடாது என உத்தரவு போடப்பட்டுள்ளது.

காஷ்மீர் ஆப்பிள் திரிஷா

காஷ்மீர் ஆப்பிள் திரிஷா

இருந்தாலும், நடிகர் ,நடிகைகள் ஜாலியாக டூர் போனது போல பனிப்பொழிவுக்கு இடையே இருந்து புகைப்படங்களை எடுத்து தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தை நிரப்பி வருகின்றனர். காஷ்மீரில் இருந்து நடிகை திரிஷா வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி பல லைக்குகளை பெற்றது.

நடிகர் மேத்யூ தாமஸ் பேட்டி

நடிகர் மேத்யூ தாமஸ் பேட்டி

இந்நிலையில், லியோ படத்தில் இணைந்துள்ள மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் பேட்டி அளித்துள்ளார். அதில், லியோ திரைப்படம் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவெர்ஸூக்குள் வருமா? என்ற கேள்விக்கு, எனக்கு அது பற்றி எதுவும் தெரியாது என மேத்யூ தாமஸ் கூறினார்.

 எத்தனை நாட்கள் கால்ஷீட்

எத்தனை நாட்கள் கால்ஷீட்

மேலும், லியோ படத்தின் ஷூட்டிங் எத்தனை நாள் காஷ்மீரில் நடக்கும், நீங்கள் எத்தனை நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளீர்கள்? என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் சிரித்துக்கொண்டே இருந்தார். சரி லியோ படத்தில் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் அதற்காவது பதில் சொல்லுங்கள் என செய்தியாளர்கள் கெஞ்கி கேட்க, இதற்கு மேல் லியோ படம் குறித்து எதுவும் சொல்ல கூடாது. கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள் என மேத்யூ தாமஸ் நச்சுனு பதில் அளித்தார். சும்மா சொல்லக்கூடாது லோகேஷ் நடிகர்களுக்கு நல்ல டிரைனிங் கொடுத்து இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X