Mohanlal: ஓடி ஓடி உதவிய மோகன்லால்.. மருத்துவமனையில் அனுமதி.. ரசிகர்கள் அதிர்ச்சி!
சென்னை: மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால் தீவிர காய்ச்சல், மூச்சுத்திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், பேரிடர் மீட்பு குழுவினருக்கும் நேரில் சென்று உதவி செய்த மோகன்லால் தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் படத்தில் நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவர், பிரபுவுடன் இணைந்து சிறைச்சாலை படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இதைத்தொடர்ந்து கமல்ஹாசன் உடன் உன்னைப்போல் ஒருவன் படத்திலும், விஜய்யுடன் ஜில்லா, சூர்யாவுடன் காப்பான் உள்ளிட்ட படங்களில் நடித்த மோகன்லால், அண்மையில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து சக்கைப்போடு போட்ட ஜெயிலர் படத்தில் கேமியோ ரோலில் மாஸ் காட்டி இருந்தார்.

மருத்துவமனையில் அனுமதி: இந்நிலையில், நடிகர் மோகன்லால் கடுமையான காய்ச்சல், மூச்சு திணறல் மற்றும் தசை வலி உள்ளிட்டவையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து, அவரை மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவர், சுவாச தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் கூறியதை அடுத்து மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு, மருந்துகளை அடுத்த 5 நாள்களுக்கு உட்கொள்ள வேண்டும் என்றும், மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர். இதுகுறித்த அறிக்கையையும் மருத்துவமனை வெளியிட்டுள்ளது.
ரசிகர்கள் கவலை: வயநாடு நிலச்சரிவின் போது ராணுவ சீருடையில் மிடுக்காக மீட்பு பணியில் களம் இறங்கி மோகன்லால், சூரல்மலை, பூஞ்செரிமட்டம், முண்டக்காடு உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்த அவர், மீட்பு பணிகளின் நிலவரம் குறித்து ராணுவ அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மீட்பு பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கு உதவிய மோகன்லால், முதற்கட்டமாக தனது அறக்கட்டளையில் இருந்து 3 கோடி ரூபாய் நிதியுதவி செய்திருந்த, நிலையில் தற்போது அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. ஓடி ஓடி உதவி செய்த இவருக்கா இப்படி என்று, ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











