வீட்டில் ஆர்கானிக் தோட்டம்.. கலக்கும் மோகன்லால்.. வைரலாகும் புகைப்படம் !

கொச்சி : மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் அது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது.

இந்நிலையில் த்ரிஷ்யம் படத்தை இயக்கிய அதே படக்குழு இப்பொழுது அதன் பாகம்-2 இயக்குவதாக வெளியான தகவலை தொடர்ந்து அதன் படப்பிடிப்புக்கள் முழு பாதுகாப்புடன் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விவசாயத்தின் மீது அதீத காதல் கொண்டுள்ள மோகன்லால் தனது வீட்டின் அருகே அழகான ஆர்கானிக் தோட்டம் அமைத்து பாதுகாப்புடன் பார்த்து வரும் நிலையில் இப்பொழுது தலைப்பாகையுடன் தோட்டத்தை கவனித்துக் கொண்டு இருக்கின்றவாறு வெளியிட்டிருக்கும் கூல் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட்டாகி வருகின்றன.

கட்டுக்குள் வைத்துள்ளார்

கட்டுக்குள் வைத்துள்ளார்

மலையாள சினிமாவின் தன்னிகரற்ற முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் மோகன்லால், பல ஆண்டுகளாக மலையாள திரையுலகை பல கோடி ரசிகர்களின் பேராதரவுடன் கட்டுக்குள் வைத்துள்ளார்.

பிளாக்பஸ்டர் ஹிட்

பிளாக்பஸ்டர் ஹிட்

இவர் நடிக்கும் திரைப்படங்கள் தொடர்ந்து வசூல் சாதனை புரிந்து வரும் நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான லூசிபர், புலி முருகன், த்ரிஷ்யம் உள்ளிட்ட திரைப்படங்கள் இந்திய அளவில் மிகப் பெரிய அங்கீகாரத்தை பெற்றதையடுத்து அதில் "த்ரிஷ்யம்" திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

சிரஞ்சீவி நடிப்பில்

சிரஞ்சீவி நடிப்பில்

இந்நிலையில் நடிகர் பிரித்விராஜ் முதன்முறையாக இயக்குனராக அவதாரம் எடுத்து மலையாள திரைத்துறையை வியப்பில் ஆழ்த்தி இருந்த "லூசிபர்" திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்ட நிலையில் இப்பொழுது இந்த திரைப்படமும் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வருகிறது.

த்ரிஷ்யம் 2

த்ரிஷ்யம் 2

கடந்த 2013 ஆம் ஆண்டு "த்ரிஷ்யம்" வெளியாகி பிளாக் பாஸ்டர் வெற்றி பெற்ற நிலையில் இப்பொழுது 7 ஆண்டுகளுக்குப் பிறகு அதே குழுவுடன் இணைந்து த்ரிஷ்யம் பாகம் இரண்டு தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் இப்பொழுது மோகன்லால் உரிய பாதுகாப்புடன் த்ரிஷ்யம் 2ல் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களுடன் கலந்து கொண்ட புகைப்படங்களை மகிழ்ச்சியுடன் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தலைப்பாகையுடன் சகஜமாக

தலைப்பாகையுடன் சகஜமாக

அதே சமயம் விவசாயத்தின் மீது அதீத காதல் கொண்டுள்ள மோகன்லால் தன்னுடைய வீட்டின் அருகே அழகான ஆர்கானிக் தோட்டம் அமைத்து அதை பாதுகாத்து வருகிறார். இந்நிலையில் அங்கு சென்ற மோகன்லால் அதைப் பாதுகாக்கும் பணியாளருடன் தோளில் கை போட்டவாறு தலைப்பாகையுடன் சகஜமாக நின்று பேசிக்கொண்டு தோட்டத்தை பார்வையிட்டவாறு வெளியிட்டுள்ள சூப்பர் கூலான புகைப்படங்கள் இப்பொழுது சமூக வலைதளத்தை ஆக்கிரமித்து ட்ரெண்டாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X