மோகன்லால் பிறந்தநாள்...மம்முட்டி முதல் பிரபலங்கள் பாராட்டு...அடடா இதுதான் மலையாள பட உலகம்

திருவனந்தபுரம் : இன்று தனது 62வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் மலையாள சூப்பர் ஹீரோவான மோகன்லால்.

மலையாளத்தில் மட்டுமில்லாமல், தமிழ் தெலுங்கு மொழிகளிலும் இவர் சிறப்பான பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.

இந்நிலையில் இவரது பிறந்தநாளையொட்டி திரைத்துறை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் மோகன்லால்

நடிகர் மோகன்லால்

நடிகர் மோகன்லால் மலையாள படவுலகின் சூப்பர் ஹீரோவாக உள்ளார். இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் மலையாளத்தில் அதிரடியாக அமைந்தவை. கடந்த 1978ல் மலையாளத்தில் திறனோட்டம் என்ற படம் மூலம் இவரது திரைப்பயணம் துவங்கியது. தொடர்ந்து பல படங்களில் நடித்து தன்னை மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக உயர்த்திக் கொண்டார். நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் இவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

இந்திய அளவில் ரசிகர்கள்

இந்திய அளவில் ரசிகர்கள்

மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என இந்திய மொழிகளில் நடித்து தனது ரசிகர்களை அதிகமாக்கிக் கொண்டவர் மோகன்லால். 4 முறை தேசிய விருதுகளை பெற்றுள்ள இவர் பிலிம்பேர் மற்றும் மாநில அளவிலான பல விருதுகளை பெற்றுள்ளார்.

12த் மேன் படம் ரிலீஸ்

12த் மேன் படம் ரிலீஸ்

தன்னுடைய இயல்பான மற்றும் ஆளுமையான நடிப்பின் மூலம் பல கதைகளை வெற்றிப் படங்களாக மாற்றிய பெருமை இவருக்கு எப்போதுமே உண்டு. தற்போது ஜீத்து ஜோசப் இயக்கத்தில் இவர் நடித்துள்ள 12த் மேன் படம் ரிலீசாகி ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

த்ரிஷ்யம் படத்தில் சிறப்பு

த்ரிஷ்யம் படத்தில் சிறப்பு

முன்னதாக ஜீத்து ஜோசப் இயக்கத்திலேயே த்ரிஷ்யம், த்ரிஷ்யம் 2 என இரண்டு படங்களில் நடித்துள்ளார். இந்தப் படம் பாபநாசம் என்ற பெயரில் கமல் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது. த்ரிஷ்யம் படங்களில் இரண்டு வயதுவந்த பெண் குழந்தைகளின் தந்தையாக, அவர்களை காப்பாற்றும் பரிதவிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார் மோகன்லால்.

தமிழில் சிறப்பான படங்கள்

தமிழில் சிறப்பான படங்கள்

இவருக்கு கேரளாவில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில் தமிழிலும் இருவர், காப்பான், ஜில்லா உள்ளிட்ட 5 படங்களில் நடித்துள்ளார். இதன்மூலம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளார். இந்தியாவிலேயே மிகவும் நேச்சுரலான நடிகர் மோகன்லால்தான் என்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் காப்பான் படத்தின் இசைவெளியீட்டு நிகழ்ச்சியில் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

மம்முட்டி வாழ்த்து

மம்முட்டி வாழ்த்து

இந்நிலையில் மோகன்லாலின் 62வது பிறந்தநாளையொட்டி அவரது சக நடிகர் மம்முட்டி மோகன்லாலுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். தொடர்ந்து திரைத்துறை பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலமாக தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

ட்ரெண்டிங்கில் மோகன்லால்

ட்ரெண்டிங்கில் மோகன்லால்

மலையாளத் திரைத்துறை பிரபலங்கள் மட்டுமின்றி விஷால் உள்ளிட்ட தமிழ் நடிகர்களும் மோகன்லாலுக்கு சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். இதனால் மோகன்லால் ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் இருந்தார். மலையாளத்தில் அதிகமான ரசிகர்களை கொண்டவர் மோகன்லால். அவரது பிறந்தநாளுக்கு பிலிமிபீட் சார்பில் நாமும் வாழ்த்துவோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X