வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் மோகன்லால்.. கடல் கடந்து வந்த சர்ப்ரைஸ் கிஃப்ட்.. ஒரே குஷி!
கொச்சி: மலையாள சினிமா உலகில் மூத்த நடிகராக உள்ள மோகன்லால் நடிப்பில் கடந்த மாதம் எம்புரான் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படம் ரூபாய் 325 கோடிகளை வசூல் செய்து முதல் முறையாக மலையாள சினிமாவில் ரூபாய் 325 கோடிகள் வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்தது. மோகன்லால் தற்போது தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவருக்கு வழங்கப்பட்ட பரிசு குறித்து பதிவிட்டுள்ளார்.
மோகன்லால் மலையாள சினிமா உலகின் கிங். இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் கேரளாவைக் கடந்து அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளார்கள். இவரது நடிப்பில் வெளியான திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வரவேற்பை தமிழ்நாட்டில் பெற்றது. இது மட்டும் இல்லாமல், இவரது நடிப்பில் கடைசியாக வெளியான எம்புரான் படம் இந்தியா முழுவதும் கவனம் பெற்றது மட்டும் இல்லாமல், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இவரது நடிப்பில் இந்த மாதத்தில் வெளியாகவுள்ள படம் என்றால், அது தடுரம். இந்த படம் வரும் 25ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. ஏற்கனவே வெளியான எம்புரான் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது மட்டும் இல்லாமல், மோகன்லாலின் மார்க்கெட்டினை ஏற்றி வைத்துள்ளது. இதனால் இந்த படத்தின் மீதும் நம்பிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் இந்த படம் ரூபாய் 100 கோடிகளுக்கு மேல் வசூலித்தாலே மிகப்பெரிய வெற்றியாக மாறும் என கூறப்படுகிறது.
மோகன்லால்: இப்படியான நிலையில் மோகன்லால் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவையும் சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி தனது ஜெர்சியில் மோகன்லால் பெயரை எழுதி, அவருக்கு வாழ்த்து தெரிவித்து, கையொப்பம் இட்டுள்ளார். இது குறித்து மிகவும் மகிழ்ச்சியாக தெரிவித்துள்ள மோகன்லால் சிறு குழந்தை போல தனது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.

மெஸ்ஸி: அவர் தனது எக்ஸ் பதிவில், " வாழ்க்கையில் சில தருணங்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு அர்த்தமுள்ளதாக இருக்கும். அவை என்றென்றும் நமது மனதுக்கு நெருக்கமாக இருக்கும். இன்று, அந்த தருணங்களில் ஒன்றை நான் அனுபவித்தேன். எனக்கு கொடுக்கப்பட்ட பரிசை நான் மெதுவாக விரித்தபோது, என் இதயம் துடித்தது - ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி கையெழுத்திட்ட ஜெர்சி எனக்கு பரிசாக வழங்கப்பட்டது. மெஸ்ஸியின் ஜெர்சியில் என் பெயர், அதுவும் அவர் தன் கைப்பட எழுதி இருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சி.

சந்தோஷம்: மெஸ்ஸியை, மைதானத்தில் அவரது திறமைக்காக மட்டுமல்ல, அவரது பணிவு மற்றும் கருணைக்காகவும் நீண்ட காலமாக பாராட்டிய என்னைப் போன்ற ரசிகருக்கு, இது உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது. டாக்டர் ராஜீவ் மங்கோட்டில் மற்றும் ராஜேஷ் பிலிப் ஆகிய இரண்டு அன்பான நண்பர்கள் முயற்சியால் இந்த விவரிக்க முடியாத சந்தோஷ தருணம் சாத்தியமில்லை. என் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து நன்றி. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த மறக்க முடியாத பரிசுக்கு கடவுளே, நன்றி" என பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு தற்போது இணையவாசிகள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











