Jailer movie: மலையாளத்திலும் ஜெயிலர் படம் வெற்றிபெற ரஜினிதான் காரணம்.. மோகன்லால் பளீச்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, மோகன்லால், சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த ஆண்டில் வெளியான படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருந்த இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். முன்னதாக விஜய்யின் பீஸ்ட் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்த சூழலில் அந்த படம் சொதப்பியது.
பீஸ்ட் படத்தை தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான ரஜினிகாந்தின் ஜெயிவர் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சர்வதேச பாக்ஸ் ஆபீசில் இந்தப் படம் 600 கோடி ரூபாய்களை அள்ளியது. இந்நிலையில் இந்த படத்தில் நடித்தது குறித்தும் ரஜினியின் மாஸ் குறித்தும் நடிகர் மோகன்லால் தனது பேட்டியொன்றில் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், சுனில் உள்ளிட்டவர்கள் லீப் கேரக்டர்களில் நடித்து கடந்த ஆண்டில் வெளியான படம் ஜெயிலர். இந்தப் படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். முன்னதாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான விஜய்யின் பீஸ்ட் படம் சொதப்பிய நிலையில் ரஜினியின் ஜெயிலர் படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. இந்த படம் சர்வதேச அளவில் 600 கோடி ரூபாய்களை வசூலித்துள்ளதாக தயாரிப்பு தரப்பான சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது.
ஜெயிலர் படத்தின் வெற்றி: மேலும் படத்தின் வெற்றியை ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார், அனிருத் மற்றும் மற்ற கலைஞர்களுடன் இணைந்து சன் பிக்சர்ஸ் கொண்டாடியது. இந்நிலையில் அடுத்ததாக ஜெயிலர் 2 படம் உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கான முன் தயாரிப்பு பணிகளில் நெல்சன் திலீப்குமார் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பான் இந்தியா படமாக வெளியான ஜெயிலர் படத்தில் ஒவ்வொரு மொழியின் முன்னணி நடிகர்கள் இணைந்திருந்தனர். அந்த வகையில் மலையாளத்திலிருந்து மோகன்லால், கன்னடத்திலிருந்து சிவராஜ் குமார் மற்றும் தெலுங்கிலிருந்து சுனில் ஆகியோர் இந்த படத்தில் இணைந்திருந்தனர்.
ரஜினியுடன் இணைந்த மோகன்லால்: அந்த வகையில் மலையாளத்திலிருந்து இந்தப் படத்தில் இணைந்திருந்த மோகன்லால், ஒரு சில காட்சிகளில் நடித்திருந்த போதிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் இந்தப் படம் குறித்த கேள்விக்கு மோகன்லால் அளித்த பதில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்து அந்தப் படம் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான சூழலில், இதன் மூலம் மலையாள படங்களில் வசூல் பாதிக்கப்பட்டதை எப்படி பார்க்கிறீர்கள் என்று மோகன்லாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மோகன்லால், தான் நடிக்கவில்லை என்றாலும் ஜெயிலர் படம் மலையாளத்தில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
ரஜினியின் ஸ்டார் பவர்: ந்த அளவிற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு அனைத்து மொழிகளிலும் ஸ்டார் பவர் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மலையாளத்தில் சூப்பர் ஸ்டாராக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருபவர் மோகன்லால். எம்புரான் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்து வருகிறார். அவ்வப்போது தமிழிலும் இவர் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவரும் சூழலில், ரஜினிகாந்தின் ஸ்டார் பவர் குறித்து சிலாகித்து பேசியுள்ளது ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











