சிவகார்த்திகேயன் அப்பாவாக நடிக்கும் லால் ஏட்டன்.. விஜய் ஃபார்முலாவை பக்காவாக பின் பற்றும் SK!

சென்னை: சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் அறிவிக்கப்படாத லிட்டில் சூப்பர் ஸ்டாராக வளர்ந்து நிற்கிறார் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. 25 வது படத்தில் இப்போதுதான் நடித்துக் கொண்டிருக்கிறார் எனும்போது, சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பலருக்கு ஆச்சரியம் தான். ஆனால் அவர் சினிமாவில் தொடர்ந்து வெற்றி வாகை சூடுவது எப்படி என்ற சூட்சுமத்தை கற்றுக் கொண்டு விட்டார் என இயக்குநர் ராஜகுமாரன் கூறியதை மீண்டும் உண்மையாக்குவதைப் போல அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளது.

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் கிராப் இயல்பாகவே உயர்ந்து கொண்டுதான் இருந்தது. கோட் படத்தில் விஜய் கையில் இருந்து துப்பாக்கியை வாங்கும் காட்சியில் நடித்த பின்னர் இவர் மீதான எதிர்பார்ப்பு எகிறிய அளவுக்கு அவரது படத்திற்கு மார்க்கெட் உயர்ந்தது. கோட் படத்திற்கு பின்னர் இவரது நடிப்பில் வெளியான அமரன் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து, வசூலில் கிட்டத்தட்ட ரூபாய் 360 கோடிகளைக் கடந்ததாக கூறப்படுகிறது.

இவரது நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் என்றால் அது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் மதராஸி படம் தான். இந்த படத்தை செப்டம்பர் மாதத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பும் வெளியானது. அதேபோல் அவரது 25 வது படமான பராசக்தி படம் முதலில் இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் படம் திராவிட சித்தாந்த அரசியல் பேசுவதால், படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் படமும் வெளியாக உள்ளது.

Malayalam Actor Mohanlal Will Acts With Sivakarthikeyan Movie As Father

அடுத்த படம்: இதற்கிடையில் சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்தின் கதையைக் கேட்டு, கால்ஷீட் கொடுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது. அதாவது குட்நைட் படத்தை இயக்கிய விநாயக் சந்திரசேகர் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார். இந்த படம் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற நக்கல் நையாண்டி நிறைந்த படமாக உருவாக உள்ளது என கூறப்படுகிறது. இது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் அப்பா கதாபாத்திரம் மிகவும் முக்கியமான கதாபாத்திரமாக எழுதப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

Take a Poll

மோகன்லால்: இதனால் இந்த அப்பா கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் மோகன்லாலை படக்குழுவினர் நடிக்க வைக்க முயற்சிகள் செய்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் மோகன் லால் நடித்தால், அது படத்திற்கு மிகப்பெரிய பலமாக மாறும் என்பது ஒருபுறம் இருந்தாலும், மோகன் லால் மூலம், கேரளாவில் தனது மார்க்கெட்டை இன்னும் உயர்த்திக் கொள்ளலாம் என சிவகார்த்திகேயன் யோசிப்பதாக கூறப்படுகிறது.

Malayalam Actor Mohanlal Will Acts With Sivakarthikeyan Movie As Father

விஜய்யை காப்பி அடிக்கும் எஸ்.கே: இந்தத் தகவலை தெரிந்து கொண்ட ரசிகர்கள், விஜய்யிடம் இருந்து துப்பாக்கியை வாங்கிய சிவகார்த்திகேயன், விஜய் படத்துக்கு எதிராகவே தனது படத்தை ரிலீஸ் செய்கிறார். இதற்கு சில அரசியல் காரணங்கள் இருந்தாலும், ஜில்லா படத்தில் விஜய்யின் அப்பாவாக மோகன்லால் நடித்திருப்பார். அதேபோல் சிவகார்த்திகேயனின் அப்பாவாக மோகன்லாலை நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பது, சிவகார்த்திகேயன் அப்படியே விஜய்யை எல்லா விஷயங்களிலும் காப்பி அடிக்கிறாரே என்று கூறி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X