Mohan Raj: பிரபல வில்லன் நடிகர் உயிரிழந்தார்.. சோகத்தில் திரைத்துறை!

சென்னை: 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர் மனதில் இடம் பிடித்த மலையாள நடிகர் மோகன் ராஜ் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 70. இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பழம்பெரும் மலையாள நடிகரான மோகன்ராஜ், 1952ம் ஆண்டு,சுகுமாரன் நாடாருக்கும் பங்கஜாக்ஷிக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவர், திருவனந்தபுரத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் படித்தார். ராணுவத்தில் சேர்வதே லட்சியமாக வைத்திருந்த இவர், தனது 20வது வயதில் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். ஆனால், காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ராணுவத்தில் இருந்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து, சுங்கத் துறையில் பணியாற்றினார். அப்போதே சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது. அதைத்தொடர்ந்து, சினிமாவில் நடித்து கொண்டே AEOவா பணியாற்றி வந்தார்.

mohanraj death malayalam

மலையாள நடிகர் மோகன் ராஜ்: 1988ம் ஆண்டு 'மூனம் முறா' என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக மாறி பல மலையாளத் திரைப்படத்தில் நடித்து பெயர் எடுத்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் மட்டும் 31 படங்களில் நடித்து வந்துள்ள இவர், 2008க்குப் பிறகு இரண்டு மலையாளத்தில் மட்டுமே நடித்தார். அவர் கடைசியாக 2022ம் ஆண்டு மம்முட்டியின் 'ரோர்சாச்' படத்தில் நடித்தார்.

இன்று இறுதிச்சடங்கு: வில்லன் கதாபாத்திரத்தின் மூலம் தனக்கு என்று தனி அடையாளத்தை ஏற்படுத்திய மோகன் ராஜ், பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சென்னையில் ஓராண்டுக்கும் மேலாக ஆயுர்வேத சிகிச்சை எடுத்துவந்தார். இதையடுத்து திருவனந்தபுரத்தில் கஞ்சிராம்குளத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இவருக்கு உஷா என்ற மனைவியும், ஜெய்ஷ்மா மற்றும் காவியா என்ற மகளும் உள்ளனர். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது. அவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பழம் பெரும் நடிகரின் மறைவு மலையாள சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X