மலையாளம் சினிமாவின் தவிர்க்க முடியாத அடையாளம்... நெடுமுடி வேணுவின் பிறந்தநாள்
கொச்சி : தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகர் நெடுமுடி வேணு.
இவர் தனது 73வது பிறந்ததினத்தை அவர் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
இதையொட்டி மலையாள நடிகர் மோகன்லால் உள்ளிட்டவர்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.

பல விருதுகளுக்கு சொந்தக்காரர்
தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளவர் நெடுமுடி வேணு. 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் இதுவரை நடித்துள்ளார். கடந்த 1978ல் தனது திரைப்பயணத்தை துவங்கிய இவர் இதுவரை தொடர்ந்து நடித்து வருகிறார். பல விருதுகளை பெற்றுள்ளார்.

தவிர்க்க முடியாத அடையாளம்
தன்னுடைய மேம்பட்ட குணச்சித்திர நடிப்பால் மலையாளம் சினிமாவின் தவிர்க்க முடியாத அடையாளமாகியுள்ளார். தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழில் கடந்த 1995ல் வெளியான மோகமுள் திரைப்படத்தில் இவர் அறிமுகமானார். தொடர்ந்து இயக்குநர் ஷங்கரின் இந்தியன், அந்நியன் மற்றும் சிலம்பாட்டம் என பல படங்களில் நடித்துள்ளார்.

பிறந்தநாள்
தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ள இவர் அதன்மூலமும் நடிகர்களை கட்டிப் போட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று இவர் தனது 73வது பிறந்ததினத்தை கொண்டாடியுள்ளார். இதையடுத்து மலையாள நடிகர் மோகன்லால் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்தனர்.

ரசிகர்கள் வாழ்த்து
தான் நடிக்கும் கேரக்டராகவே மாறும் நடிகர்கள் சிலரே உண்டு. அத்தகைய நடிப்பை ரசிகர்களுக்கு வழங்கிவருபவர் நெடுமுடி வேணு. மலையாளம், தமிழை அடுத்து இவருக்கு இந்திய அளவில் ரசிகர்கள் காணப்படுகின்றனர். தொடர்ந்து நடித்துவரும் இவருக்கு சிறப்பான பிறந்தநாள் வாழ்த்துக்களை ரசிகர்களும் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











