மலையாள நடிகர் நெடுமுடி வேணு மருத்துவமனையில் அனுமதி
கொச்சி : மலையாள நடிகர் நெடுமுடி வேணு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1978 முதல் மலையாளம், தமிழ் உள்ளிட்டவற்றில் நடித்து வருகிறார் நெடுமுடி வேணு.

மலையாள நடிகர் நெடுமுடி வேணு
மலையாளம் மற்றும் தமிழில் சிறப்பான நடிகராக வலம்வருபவர் நெடுமுடி வேணு. இவரது இயல்பான நடிப்பால் தனக்கென சிறப்பான ரசிகர்கள் வட்டத்தை கொண்டுள்ளவர் இவர். பத்திரிகையாளராகவும் நாடக நடிகராகவும் இருந்த இவர் கடந்த 1978 முதல் திரைப்படங்களில் நடிக்கத் துவங்கினார்.

500க்கும் மேற்பட்ட படங்கள்
இதுவரை 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நெடுமுடி வேணு, 3 தேசிய விருதுகள் மற்றும் 6 மாநில விருதுகளை பெற்றுள்ளார். தொடர்ந்து சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கனமான கதாபாத்திரங்களையும் அசால்ட்டாக நடித்து கொடுத்து விடுவார்.

தமிழிலும் சிறப்பான படங்கள்
தமிழில் இந்தியன், அந்நியன், பொய் சொல்லப் போறோம், சர்வம் தாள மயம் உள்ளிட்ட சில படங்ளில் நடித்துள்ளார் நெடுமுடி வேணு. இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். தற்போது இவருக்கு 73 வயதான நிலையில் சமீபத்தில் கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டிருந்தார்.

மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில் நேற்றைய தினம் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு தொடர்ந்து சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ரசிகர்கள் வேதனை
தொடர்ந்து சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கட்டிப் போட்ட நெடுமுடி வேணு தற்போது உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது. அவர் விரைவில் நலம்பெற அவர்கள் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











