மலையாள நடிகர் நெடுமுடி வேணு காலமானார்

கொச்சி : உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மலையாள நடிகர் நெடுமுடி வேணு காலமானார்.

கடந்த 1978 முதல் மலையாளம், தமிழ் உள்ளிட்டவற்றில் நடித்து வந்தார் நெடுமுடி வேணு.

சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டிருந்தார்.

மலையாள நடிகர் நெடுமுடி வேணு

மலையாள நடிகர் நெடுமுடி வேணு

மலையாளம் மற்றும் தமிழில் சிறப்பான நடிகராக வலம்வந்தவர் நெடுமுடி வேணு. இவரது இயல்பான நடிப்பால் தனக்கென சிறப்பான ரசிகர்கள் வட்டத்தை கொண்டிருந்தவர் இவர். பத்திரிகையாளராகவும் நாடக நடிகராகவும் இருந்த இவர் கடந்த 1978 முதல் திரைப்படங்களில் நடிக்கத் துவங்கினார்.

500க்கும் மேற்பட்ட படங்கள்

500க்கும் மேற்பட்ட படங்கள்

இதுவரை 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நெடுமுடி வேணு, 3 தேசிய விருதுகள் மற்றும் 6 மாநில விருதுகளை பெற்றுள்ளார். தொடர்ந்து சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். கனமான கதாபாத்திரங்களையும் அசால்ட்டாக நடித்து கொடுத்து விடுவார்.

தமிழிலும் சிறப்பான படங்கள்

தமிழிலும் சிறப்பான படங்கள்

தமிழில் இந்தியன், அந்நியன், பொய் சொல்லப் போறோம், சர்வம் தாள மயம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார் நெடுமுடி வேணு. இந்தியன் 2 படத்திலும் நடித்துள்ளார். தற்போது இவருக்கு 73 வயதான நிலையில் சமீபத்தில் கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டிருந்தார்.

மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதி

இந்நிலையில் நேற்றைய தினம் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். அவருக்கு தொடர்ந்து சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மருத்துவமனையில் மறைவு

மருத்துவமனையில் மறைவு

தொடர்ந்து சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கட்டிப் போட்ட நெடுமுடி வேணு தற்போது மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இதையடுத்து சக நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மலையாள திரையுலகில் குறிப்பிடத்தக்க நடிகராக வலம்வந்த இவரது மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தேசிய விருதுகள்

தேசிய விருதுகள்

நெடுமுடியை பூர்வீகமாக கொண்ட இவர் இந்திய அளவில் தன்னுடைய நடிப்பால் அறியப்படுகிறார். கடந்த 1990ல ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். 2003 மற்றும் 2006ல் தேசிய விருதை வென்றுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X