சிம்பு -கௌதம் மேனன் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்

திருவனந்தபுரம் : நடிகர் சிம்பு -கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகி வருகிறது வெந்து தணிந்தது காடு படம்.

Recommended Video

Jai Bhim Slapping Controversy | நான் செய்தது சரி Prakash Raj விளக்கம்

ஜெயமோகன் இந்தப் படத்திற்கு கதையெழுதியுள்ள நிலையில் வேல்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்து வருகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தில் பிரபல மலையாள நடிகர் ஒருவர் தற்போது இணைந்துள்ளது குறித்து படக்குழு அப்டேட் தெரிவித்துள்ளது.

நடிகர் சிம்பு

நடிகர் சிம்பு

நடிகர் சிம்பு அடுத்தடுத்து தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்து வருகிறார். அவரது ஈஸ்வரம் படம் வெளியாகி சிறப்பான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்புவின் மாநாடு படம் வரும் 25ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இம்மாத இறுதியில் ரிலீஸ்

இம்மாத இறுதியில் ரிலீஸ்

இந்தப் படம் முன்னதாக தீபாவளி பந்தயத்தில் கலந்துக் கொண்ட நிலையில் அதிலிருந்து பின்வாங்கி தற்போது இம்மாத இறுதியில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாகியுள்ளார் கல்யாணி பிரியதர்ஷன். படத்தில் வில்லனாக எஸ்ஜே சூர்யா நடித்துள்ளார்.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பு

சுரேஷ் காமாட்சி தயாரிப்பு

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் போஸ்டர்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு ரசிகர்களின் வரவேற்பிற்கு உள்ளாகி வருகிறது. எஸ்ஜே சூர்யா மற்றும் சிம்பு மோதும் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

வெந்து தணிந்தது காடு படம்

வெந்து தணிந்தது காடு படம்

இந்நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு அடுத்ததாக வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி மிகுதியான எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது. இதில் மிகவும் பரிதாபமான நிலையில் காணப்படுகிறார் சிம்பு.

வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பு

வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பு

வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தின் சூட்டிங், திருச்செந்தூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. பிரபல ஹாலிவுட் படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்துள்ள லீ விட்டேகர் இந்தப் படத்திலும் இணைந்துள்ளார்.

ஏஆர் ரஹ்மான் இசை

ஏஆர் ரஹ்மான் இசை

படத்திற்கு இசையமைத்து வருகிறார் ஏஆர் ரஹ்மான். இத்தகைய பிரபலங்கள் இந்தப் படத்தில் உள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு தாறுமாறாக உள்ளது. இந்நிலையில், படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் நீரஜ் மாதவ் தற்போது ஒப்பந்தமாகியுள்ளதாக படக்குழு அப்டேட் தெரிவித்துள்ளது.

படத்தில் இணைந்த நீரஜ் மாதவ்

படத்தில் இணைந்த நீரஜ் மாதவ்

மலையாளத்தில் த்ரிஷ்யம், சார்லி உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ள நீரஜ் மாதவ், இந்தியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள தி பேமிலி மேன் வெப் தொடரின் மூலம் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுள்ளார். இவருக்கு வெந்து தணிந்தது காடு படத்தில் மிகவும் வலுவான கேரக்டர் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X