Don't Miss!
- Finance
பட்ஜெட்-க்கு முன் வரும் பொருளாதார ஆய்வறிக்கை.. இது ஏன் ரொம்ப முக்கியம் தெரியுமா..?
- Lifestyle
Shukra Gochar 2022: கும்பம் செல்லும் சுக்கிரனால் பிப்ரவரி 15 வரை இந்த ராசிகளுக்கு சூப்பரா இருக்கப் போகுது...
- News
புது வீடு கட்டி வீடியோ போட்ட யூடியூப் பிரபலம்..பார்த்துவிட்டு கொள்ளையடிக்க வந்த நபர்-கோவையில் திடுக்
- Sports
விராட் கோலிக்கு மீண்டும் ஒரு வீக்னஸ்.. தொடர்ச்சியாக ஒரே முறையில் அவுட்.. வசீம் ஜாஃபர் எச்சரிக்கை!
- Technology
ரூ.6,999க்கு அறிமுகமான ஸ்மார்ட்போன்! 124 மணிநேர பேட்டரி ஆயுள்.. இது எப்படி இருக்கு?
- Automobiles
அவ்வளவு காசு வைத்திருந்தும் மாடிஃபைடு கார்களை பயன்படுத்தும் இந்திய விஐபி-கள்!! இவ்வளவு பேர் இருக்காங்களா?
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
சூப்பர் ஸ்மார்ட்டாக மாறிய நடிகர் நிவின் பாலி.. எவ்ளோ எடை குறைச்சிருக்காரு தெரியுமா?
கொச்சி : மலையாளம், தமிழ் என ஏராளமான ரசிகர்களை கொண்டவர் நடிகர் நிவின் பாலி. தமிழில் இவரது நடிப்பில் வெளியான நேரம், பிரேமம் படங்களுக்கு தனிப்பட்ட ரசிகர்கள் காணப்படுகின்றனர்.
தன்னுடைய அழகான சிரிப்பு மற்றும் இயல்பான நடிப்பால் இவர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிப் படங்களையும் தொடர்ந்து கொடுத்து வந்தார்.
இதனிடையே சமீபமாக இவர் அதிகமாக குண்டடித்து காணப்பட்டார். இதனால் பல்வேறு விமர்சனங்களையும் சந்தித்தார்.

நடிகர் நிவின் பாலி
நடிகர் நிவின் பாலி மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழிலும் ஏராளமான ரசிகர்களை கொண்டவர். இவரது பல படங்கள் ரசிகர்களின் விருப்பத்திற்குரியவைகளாக அமைந்து வெற்றியையும் கொடுத்துள்ளன. கலக்கலான சிரிப்பு மற்றும் இயல்பான நடிப்பு இவரது ப்ளஸ். நேரம், பிரேமம், பெங்களூரு டேஸ் போன்ற வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நிவின் நடிப்பில் தமிழில் நேரம் மற்றும் பிரேமம் ஆகிய படங்கள் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரிட் படங்களாக அமைந்தன.

தமிழிலும் ரசிகர்கள்
தமிழில் இவருக்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் இவரது படங்கள் அனைத்தும் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால் தொடர்ந்து தமிழ் படங்களில் இவர் கவனம் செலுத்தவில்லை. தற்போது ராம் இயக்கத்தில் அஞ்சலியுடன் இணைந்து ஏழு கடல் ஏழு மலை என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர் சூரியும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் நடிகர்கள் குறித்த அப்டேட் சமீபத்தில் வெளியானது.

எடை கூடிய நிவின்
ஸ்மார்ட் லுக்கில் ரசிகர்களை கவர்ந்துவந்த நிவின் பாலி, கொரோனா காலகட்டத்தில் உடல் எடை கூடி காணப்பட்டார். இதுகுறித்து தொடர்ந்து விமர்சனங்களையும் எதிர்கொண்டார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடல் எடை கூடியதற்கான காரணம் தெரியாமல் அவர்கள் கேள்விகளை கேட்டு வந்தனர். அவருக்கு உடல்நலக் குறைவு காரணமாக உடல் எடை கூடியதா என்பதை தெரிந்துக் கொள்ளவும் முயற்சித்தனர்.

அதிகமான விமர்சனங்கள்
நிவின் பாலி கலந்து கொண்ட நிகழ்ச்சிகளின் புகைப்படங்களும் வெளியாகி பேசு பொருளானது. இதனிடையே தற்போது தன்னுடைய உடல் எடையை அதிகமான அளவில் குறைத்துள்ளார் நிவின் பாலி. ஏறக்குறைய 25 கிலோ வரை உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக பழைய ஸ்மார்ட்னசுடன் தற்போது காணப்படுகிறார். ஏழு கடல் ஏழு மலை படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியுடன் நிவின் பாலி எடுத்துக் கொண்டுள்ள புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

எடை குறைத்த நிவின் பாலி
நிவின் பாலியின் இந்த மாற்றம் அவரது ரசிகர்களை மிகுந்த உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டில் நிவின் பாலி நடிப்பில் மலையாளத்தில் அடுத்தடுத்த 3 படங்கள் ரிலீசாகவுள்ள நிலையில், தற்போது உடல் எடையை அவர் கணிசமாக குறைத்து ஸ்மார்ட்டாகியுள்ள நிலையில், மேலும் அதிகமான படங்களில் அவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது இந்த மாற்றத்திற்கு வரவேற்பும் வாழ்த்துக்களும் ரசிகர்கள் தரப்பிலிருந்து தொடர்ந்து வருகிறது.