Don't Miss!
- News
பரபர சூழலில் இன்று கூடும் நாடாளுமன்றம்.. அதானி விவகாரத்தை கையில் எடுக்கும் எதிர்க்கட்சிகள்
- Technology
அட்டகாசமான வடிவமைப்புடன் இந்தியாவில் களமிறங்கும் கோகோ கோலா போன்: அறிமுகம் தேதி இதுதான்.!
- Lifestyle
Today Rasi Palan 03 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கவனக்குறைவே பெரும் சிக்கலை உண்டாக்கக்கூடும்...
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் இணையும் சூர்யா.. படத்தோட பேரே மிரட்டுதே!
திருவனந்தபுரம் : நடிகர் பிரித்விராஜ் மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.
இவரது பல படங்கள் இவரது இயல்பான மற்றும் எளிமையான நடிப்பால் மிகச்சிறந்த பாராட்டுக்களை ரசிகர்களிடையே பெற்றுள்ளது.
அசிஸ்டெண்ட் இயக்குநராக சினிமாவில் தன்னுடைய கேரியரை துவக்கிய பிரித்விராஜ் லூசிபர் என்ற சிறப்பான படத்தின்மூலம் தன்னை இயக்குநராகவும் அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.
காவியத்தலைவன்
படத்துக்கு
அப்புறமா
தமிழ்ல
இதுக்காகத்தான்
நடிக்கலை..
பிரித்விராஜ்
ஓபன்
டாக்!

நடிகர் பிரித்விராஜ்
நடிகர் பிரித்விராஜ் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தென்னிந்திய அளவில் சிறப்பான நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். பல வெற்றிப் படங்களை வர் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் கொடுத்துள்ளார். தமிழில் ஜோதிகாவுடன் இணைந்து இவர் நடித்த மொழி படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றது.

அசிஸ்டெண்ட் இயக்குநர்
தன்னுடைய கேரியரில் அசிஸ்டெண்ட் இயக்கநராகவே இவர் களமிறங்கினார். தொடர்ந்து பிசியாக நடித்துக் கொண்டிருந்தபோதே, மோகன்லாலை வைத்து லூசிபர் என்ற படத்தை இயக்கினார். தன்னுடைய முதல் படத்திலேயே 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து தன்னை சிறந்த இயக்குநர்கள் வரிசையில் இணைத்துக் கொண்டார்.

அடுத்தடுத்த படங்கள்
தொடர்ந்து
இவர்
படங்களை
இயக்கவேண்டும்
என்று
அனைத்து
தரப்பினரும்
கோரிக்கை
விடுத்து
வந்த
நிலையில்,
முதல்
படத்தில்
அழுத்தமான
கதையை
கொடுத்த
இவர்,
தனது
இரண்டாவது
படமான
ப்ரோ
டாடி
படத்தில்
காமெடி
களத்தை
மையமாக
கொண்டு
படத்தை
இயக்கினார்.
இந்தப்
படத்திலும்
மோகன்லாலையே
இவர்
ஹீரோவாக
கொண்டார்.

லூசிபர் படத்தின் 2வது பாகம்
படத்தில் மீனா, கல்யாணி பிரியதர்ஷனுடன் பிரித்விராஜும் லீட் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தின் கதை அனைத்து ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. முன்னதாக லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான எம்பூரான் படத்திற்கும் பூஜை போடப்பட்ட நிலையில், அந்தப் படம் கைவிடப்பட்டது.

அடுத்தடுத்த படங்கள்
விரைவில் லூசிபர் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இவரது நடிப்பில் கோல்ட், பிரம்மம் என அடுத்தடுத்தப் படங்கள் ரசிகர்களை கவரும்வகையில் உருவாகியுள்ளன. இந்நிலையில் மீண்டும் இயக்கத்தின் பக்கம் திரும்பவுள்ளார் பிரித்வி.

பிரித்வி இயக்கத்தில் சூர்யா
பான் இந்தியா படமாக இந்தப் படம் உருவாகவுள்ளதாகவும் படத்தில் நடிகர் சூர்யா மிகவும் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கேஜிஎப் படங்களை கொடுத்த ஹம்பாலே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்திற்கு டைசன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.