சூர்யா - பிருத்விராஜ் சந்திப்பின் காரணம் இதுதானா... யார் அந்த லக்கி மேன்..? அடுத்த பயோபிக் ரெடி!
சென்னை: சூர்யா தற்போது தனது 42வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் 'சூர்யா 42' 10 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், சூர்யாவும் ஜோதிகாவும் மலையாள நடிகர் பிருத்விராஜ்ஜை சந்தித்தனர், அப்போது அவரது மனைவியும் உடனிருந்தார்.
சூர்யா - பிருத்விராஜ் சந்திப்பின் பின்னணி குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூர்யா - பிருத்விராஜ் சந்திப்பு
சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் 'சூர்யா 42' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். 10 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படம் 2023 இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மலையாள நடிகர் பிருத்விராஜ்ஜை சூர்யாவும் ஜோதிகாவும் நேரில் சந்தித்தனர். அப்போது சூர்யா - ஜோதிகா ஜோடி, பிருத்விராஜ் அவரது மனைவியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். நான்கு பேரும் எடுத்துக்கொண்ட க்யூட்டான போட்டோ இணையத்தில் வைரலானது.

மீட்டிங்கில் முடிவான பயோ பிக்
சூர்யாவும் பிருத்விராஜ்ஜும் இதுவரை இணைந்து நடித்தது இல்லையென்றாலும், ஜோதிகா - பிருத்விராஜ் ஜோடி மொழி படத்தில் நடித்திருந்தனர். ராதாமோகன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் இன்றுவரை ரசிகர்களின் ஃபேவரைட்டாக உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் நடந்த சந்திப்பின் போது சூர்யாவின் தயாரிப்பில் பிருத்விராஜ் நடிப்பது குறித்து பேச்சுவார்த்தை எழுந்ததாகக் கூறப்படுகிறது. அதன்படி தொழிலதிபர் ஒருவரின் பயோபிக்காக இந்தப் படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் கூட்டணி உறுதியாகும்!
இந்த தகவலின் அடிப்படையில், பிரிட்டனியா நிறுவனத்தின் மறைந்த தொழிலதிபர் ராஜன் பிள்ளை வாழ்க்கை வரலாற்றில் பிருத்விராஜ் நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனாலும் இதுகுறித்து சூர்யா - பிருத்விராஜ் தரப்புகளில் இருந்து அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. அதேபோல், இந்தப் படத்தின் இயக்குநர் யார் என்பது பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

தயாரிப்பில் பிஸியான ஜோதிகா
சூர்யா நடிப்பில் பிஸியாக இருப்பதோடு, பட தயாரிப்புகளிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். சூர்யா - ஜோதிகா இணைந்து உருவாக்கிய 2டி நிறுவனம் பல படங்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், பிருத்விராஜ் நடிக்கவுள்ள படத்தின் தயாரிப்பு பணிகளை ஜோதிகாவே கவனிக்கப் போவதாக சொல்லப்படுகிறது. மலையாளத்தில் சில படங்கள் உட்பட பிரபாஸ் - பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகும் சலார் திரைப்படத்தில் நடித்து வருகிறார் பிருத்விராஜ். அதன்பின்னர் சூர்யா தயாரிப்பில் நடிக்கும் திரைப்படம் குறித்து தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











