ஒரே பேச்சா இருக்கே.. 'விக்ரம்' படத்தில் கமலுக்கு வில்லனாகிறாரா, பிரபல நடிகையின் கணவர்?
சென்னை: கமலின் விக்ரம் படத்தில் பிரபல ஹீரோயினின் கணவர் அவருக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
மாநகர், கைதி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், அடுத்து விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார்.

வில்லன் விஜய் சேதுபதி
இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இதில் மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருக்கிறார். சாந்தனு, ஆண்ட்ரியா உட்பட பலர் இதில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தை அடுத்து அவர் கமல் நடிக்கும் படத்தை இயக்குகிறார்.

பர்ஸ்ட் லுக்
இதற்கு 'விக்ரம்' என டைட்டில் வைத்துள்ளனர். அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தை, கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. கமல்ஹாசன் பிறந்த நாளான கடந்த நவம்பர் 7 ஆம் தேதி, படத்தின் டைட்டிலும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும், தலைப்புக்கான டீஸரையும் வெளியிட்டது படக்குழு.

மிரட்டிய டீசர்
காவல்துறை சீருடை மற்றும் கரை வேட்டி கட்டியிருக்கும் சிலரை வரிசையாக அமரவைத்து, தலைவாழை இலைபோட்டு கறி விருந்து வைக்கும் கமல்ஹாசன், பின்னர் அவர்களை வேட்டையாடுவது போல அந்த டீசர் மிரட்டியது. இதையடுத்து கமல்ஹாசன் ரசிகர்கள் இந்த டீசரை வைரலாக்கினர்.

கிரைம் த்ரில்லர்
இந்தப் படம் முழுக்க முழுக்க கிரைம் த்ரில்லர் பாணியில் இருக்கும் என கூறப்படுகிறது. சென்னையிலேயே ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை முடித்து, அவர் நடிக்கும் 'இந்தியன் 2' படத்துக்கு முன்பாகவே வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கான வேலைகள் தொடங்கியுள்ளன.

நஸ்ரியாவின் கணவர்
இதற்கிடையே இந்தப் படத்தில் கமலுக்கு வில்லனாக, மலையாள நடிகர் பகத் பாசில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. நடிகை நஸ்ரியாவின் கணவரான பகத் பாசில் தமிழில் ஏற்கனவே சூப்பர் டீலக்ஸ், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படங்களில் நடித்துள்ளார். அவர் இதில் அரசியல்வாதியாக நடிக்க இருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











