மன அழுத்தத்தால் தற்கொலை..சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகர்..அதிர்ச்சியில் திரையுலகம்!
கேரளா : அங்கமாலி டைரிஸ் படத்தில் நடித்து பிரபலமான மலையாள நடிகர் சரத் சந்திரன் வெள்ளிக்கிழமை அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்.
37 வயதே ஆன நடிகர் சரத் சந்திரன் மலப்புரம் கக்காட்டில் உள்ள அவரது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவரது சலடத்தை கைப்பற்றி போலீசார் மேற்கொண்ட சோதனையில், தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்ற கடிதத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

நடிகர் சரத் சந்திரன்
மலையாள நடிகர் சரத் சந்திரன் 2016 ஆம் ஆண்டு வெளியான அனீஸ்யா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய 'அங்கமாலி டைரீஸ்' படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இவர் 'ஒரு மெக்சிகன் அபாரத', சிஐஏ, கூடே, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பல விளம்பரங்களில் நடித்துள்ள சரத் சந்திரன், பல முன்னணி நடிகர்களுக்கும் குரல் கொடுத்துள்ளார்.

தற்கொலைக்கு யாரும் காரணமில்லை
இந்நிலையில், நடிகர் சரத் சந்திரன் கடந்த வெள்ளிக்கிழமை அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததை அடுத்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு கதவை உடைத்து உள்ளே சென்றபோது அவர் இறந்து கிடந்தார். இதையடுத்து, வீட்டில் போலீசார் மேற்கொண்ட சோதனையில், அவரது மரணத்திற்கு யாரும் காரணமில்லை என்ற கடிதத்தை போலீசார் வீட்டிலிருந்து கண்டுபிடித்தனர்.

விஷம் குடித்து தற்கொலை
கொச்சி பூர்வீகமாக கொண்ட சரத் சந்திரன் சினிமாவில் நுழைவதற்கு முன்பு ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு ஒரு சகோதரும் உள்ளார். நடிகர் சரத் சந்திரன் மன உளைச்சலால் இந்த விபரீத முடிவை எடுத்ததாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். நடிகர் விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ஆழ்ந்த இரங்கல்
சரத் சந்திரனின் அகால மரணத்தால் மலையாள திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. பலரும் அவருக்கு இணையத்தின் வழியாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தேவையில்லாத மன உளைச்சல், மன அழுத்தம் போன்ற காரணங்கால் அண்மைக்காலமாக தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுபோன்று தற்கொலை எண்ணம் வருகிறது என்றால், அவர்கள் உரிய கவுன்சிலிங் எடுத்துக்கொள்வது சிறந்ததாக இருக்கும்.


Click it and Unblock the Notifications











