பிரபல மலையாள நடிகர் ஷானவாஸ் உயிரிழந்தார்.. கண்ணீரில் ரசிகர்கள்!

கேரளா: பிரபல மலையாள திரைப்பட நடிகர் பிரேம் நசிரின் மகன் ஷானவாஸ் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 70. அவரது மறைவு, திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளாக ஷானவாஸ் சிறுநீரகம் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்ட அவர், அதற்காக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றிரவு அவரது உடல்நிலை மோசமடைந்தால், திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷானவாஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை கொடுத்த போதும், சிகிச்சை பலன் இன்றி இரவு 11:50 மணியளவில் உயிரிழந்தார். அவரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக திருவனந்தபுரத்தில் உள்ள வசூதகாட்டில் உள்ள கார்டன் ட்ரினிட்டி வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு குடும்பத்தினரும், உறவினர்களும், நண்பர்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஷானவாஸின் இறுதிச் சடங்குகள் பாலயம் முஸ்லிம் ஜமாத் கல்லறையில் மாலை 5 மணியளவில் நடைபெறும் என ஷானவாஸின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Shanavas Prem Nazir death
Photo Credit:

நடிகர் ஷானவாஸ்: நடிகர் பிரேம் நசீர் மற்றும் ஹபீபா பீவி தம்பதிகளின் மகனாக பிறந்தார் ஷானவாஸ். திருவனந்தபுரத்தில் உள்ள சிராயின்கீழு மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படித்த இவர், பட்டப்படிப்பை சென்னை நியூ கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். திரைத்துறையின் மீது இருந்த, அதீத ஆர்வத்தால், தனது தந்தையைப் போலவே சினிமாவில் நடிகராக விரும்பினார். இதைத் தொடர்ந்து, 1981 ஆம் ஆண்டு பாலச்சந்திர மேனனின் 'பிரேமகீதங்கள்' திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.

பல வெற்றிப்படங்கள்: அதைத்தொடர்ந்து மழநிலவு, ஈயுகம், மணிக்கூடு, நீலகிரி, கர்ப்பஸ்ரீமான், சகரியாயுடே கர்ப்பினிகள் என பல வெற்றிப்படத்தில் நடித்துள்ளார். மேலும், இவர், சங்குபுஷ்பம், அம்மாத்தொட்டில், கடமட்டத்து கதனார், சம்மர் இன் அமெரிக்கா போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். 2011 ஆம் ஆண்டு வெளியான 'சைனா டவுன்' திரைப்படம் மூலம் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சினிமாவிற்கு ஷானவாஸ் என்ட்ரி கொடுத்தார். அதைத்தொடர்ந்து பிருத்விராஜ் நடித்த 'ஜனா கன மன' படத்தில் நல்ல ரோலில் நடித்திருந்தார். அதுதான் அவர் நடித்த கடைசி திரைப்படம். அந்த திரைப்படத்திற்கு பிறகு உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் திரையில் தென்படவே இல்லை. ஷானவாஸ் மலையாளம் மற்றும் தமிழ் என 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ரசிகர்கள் இரங்கல்: ஷானவாஸின் மறைவு மறைவு ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். ஷானவாஸின் தீவிர ரசிகர்கள் ஒருவர், "மலையாள ஜாம்பவான் பிரேம் நசிரின் அன்புமகனான ஷானவாஸின் மறைவு கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். பாரம்பரியத்தை மரியாதையுடன் முன்னெடுத்த ஒரு திறமையான நடிகர். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்" என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு நடிகர், தனது இரங்கலில், "ஒருமுறை ராஜா நம்மை விட்டுப் பிரிந்தார், இப்போது அவரது மகனும் நம்மை விட்டு பிரிந்துவிட்டார். ஷானவாஸிம் ஆன்மா சாந்தி அடையட்டும் என பதிவிட்டுள்ளார். மறைந்த நடிகர் ஷானவாசுக்கு ஆயிஷா அப்துல் அஜீஸ் என்கிற மனைவியும், அஜீத் கான், ஷமீர் கான் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

More from Filmibeat

Read more about: death மரணம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X